கரூர் மாவட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், வாய்ப்பாடு ஒப்பித்த மூன்று மாணவ, மாணவிகளை தலா ஒருமணி நேரம் தான் வகித்த தலைமை ஆசிரியர் பதவியை வகிக்க வைத்து, மாணவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.
தலைமை ஆசிரியர் சீட்டில் லோகேஷ்
`149 மாணவர்களுக்கு சுரை விதை; முதல் அறுவடையைச் செய்து பரிசு பெற்ற மாணவி' - அரசுப் பள்ளியில் அசத்தல்!
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இயங்கி வருகிறது, லிங்கத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.
தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களைக் கல்வியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்த புதுப்புது பாணிகளைக் கையாண்டு வருகிறார். அந்த வகையில், 4, 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, 9-வது வாய்ப்பாடு வரை பிழையில்லாமல் ஒப்பித்த மூன்று மாணவ, மாணவிகளை தலா ஒரு மணிநேரம் பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகிக்க வைத்து, அழகு பார்த்திருக்கிறார்.
தலைமை ஆசிரியர் சீட்டில் சத்யப்ரியா
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் 9-வது வாய்ப்பாடு வரை தெளிவாகப் படித்து வரும்படி, தலைமை ஆசிரியர் பரணிதரன் மாணவர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களை வாய்ப்பாட்டை ஒப்பிக்க வலியுறுத்தினார்.
9-வது வாய்ப்பாடு வரை தவறில்லாமல் மாணவிகள் ஜனனி, சத்யப்ரியா மற்றும் மாணவன் லோகேஷ் ஆகியோர் ஒப்பித்தனர். அவர்களைப் பாராட்டிய தலைமை ஆசிரியர் பரணிதரன், அவர்களை கௌரவிக்கும்விதமாக தான் வகித்துவந்த தலைமை ஆசிரியர் பதவியை அந்த மூன்று மாணவர்களுக்கும் அளித்து, மூன்று மாணவர்களையும் தலா ஒருமணி நேரம் தலைமை ஆசிரியர் பதவியை வகிக்கவைத்தார்.
பரணிதரன்அவர்கள் பதவி வகித்த அந்த நேரத்தில், தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்து மாணவ, மாணவிகளின் குறிப்பேடுகளை ஆய்வு செய்தனர். இந்த முயற்சி மாணவர்களிடம் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், இனி வாரம்தோறும் பாடங்களில் கேள்விகள் கேட்கப்பட்டு இப்படி சரியாக பதில் அளிக்கும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கப்படும்.
இதுகுறித்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் பரணிதரனிடம் பேசினோம். ``மாணவர்களுக்கு கல்வி கற்பதில் ஆர்வத்தை ஏற்படுத்த புதிய வழிமுறைகளைக் கையாண்டு வருகிறேன். அந்த வகையில்தான், 9-வது வாய்ப்பாடு வரை ஒப்பிக்கும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவியை வகிக்கும் உரிமையைக் கொடுக்க நினைத்தேன். 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகளில் இந்த மூன்று மாணவ, மாணவிகள்தான் 9-வது வாய்ப்பாடு வரை தடுமாறாமல் ஒப்பித்தனர். அந்த மூன்று மாணவர்களுக்கும் தலா ஒரு நாள் தலைமை ஆசிரியர் பதவி வழங்க நினைத்தேன். ஆனால், அப்படிச் செய்தால் பள்ளியின் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படும் என்பதால், 3 பேருக்கும் தலா ஒரு மணி நேரம் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கினேன்.
பரணிதரன் (தலைமை ஆசிரியர்)
அதன்படி, பகல் 12 முதல் 1 மணி வரை ஜனனி, பிற்பகல் 2 முதல் 3 மணி வரை லோகேஷ், பிற்பகல் 3 முதல் 4.10 மணி வரை சத்யப்ரியா ஆகிய 3 பேர் தலைமை ஆசிரியர் பதவி வகித்தனர். அவர்கள் பதவி வகித்த அந்த நேரத்தில், தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்து மாணவ, மாணவிகளின் குறிப்பேடுகளை ஆய்வு செய்தனர். இந்த முயற்சி மாணவர்களிடம் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், இனி வாரம்தோறும் பாடங்களில் கேள்விகள் கேட்கப்பட்டு இப்படி சரியாக பதில் அளிக்கும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கப்படும்" என்றார்.