TODAY RASIPALAN - 15-09-2019 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, September 15, 2019

TODAY RASIPALAN - 15-09-2019





        இன்றைய ராசிபலன்கள்

           15-09-2019

        *ஞாயிற்றுக்கிழமை*

               *ஆவணி 29*

              *விகாரி வருடம் - 2019*

*🔯✡☸🔯✡🕉☸🔯✡☸🔯*



*🔯மேஷம் ராசி*

செயல்பாடுகளில் இருந்துவந்த இடர்பாடுகள் குறைந்து புத்துணர்ச்சி உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வழக்குகளில் இருந்த இழுபறிகள் குறைந்து சுமூகமான நிலை உருவாகும். தொழில் சம்பந்தமான எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அசுவினி : புத்துணர்ச்சி உண்டாகும். 
பரணி : இழுபறிகள் குறையும். 
கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

*🔯ரிஷபம் ராசி*

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு புத்திக்கூர்மை புலப்படும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். புதுவிதமான தொழில்நுட்ப வித்தைகளை பயில முயல்வீர்கள். 

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
அதிர்ஷ்ட எண் : 2 
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 

கிருத்திகை : புத்திக்கூர்மை புலப்படும். 
ரோகிணி : சாதகமான நாள்.  
மிருகசீரிடம் : புதிய வித்தைகளை பயில்வீர்கள்.

*🔯மிதுனம் ராசி*

தானிய சம்பத்துக்களால் இலாபம் உண்டாகும். கவலைகள் ஏற்பட்ட சோர்வு நீங்கும். பிறரிடம் எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் சாதகமான முடிவைத் தரும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 5 
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 

மிருகசீரிடம் : இலாபம் உண்டாகும். 
திருவாதிரை : சோர்வு நீங்கும். 
புனர்பூசம் : வெற்றி உண்டாகும்.

*🔯கடகம் ராசி*

தொழில் சம்பந்தமான முயற்சிகள் ஈடேறும். திடீர் யோகத்தால் எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். தாய்மாமன் உறவுகள் மேம்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் எதிர்பார்த்த பலனை தரும். 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 1 
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். 

புனர்பூசம் : முயற்சிகள் ஈடேறும். 
பூசம் : உறவுகள் மேம்படும். 
ஆயில்யம் : கீர்த்தி உண்டாகும்.

*🔯சிம்மம் ராசி*

பிறரை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் மற்றும் பதற்றமான சூழல் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 7 
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் 

மகம் : விவேகம் வேண்டும். 
பூரம் : பதற்றமான நாள்.  
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

*🔯கன்னி ராசி*

புதிய உறுப்பினர்களின் வருகை உண்டாகும். சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணி சம்பந்தமான கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். உயர்கல்வி பயில்பவர்களுக்கு திறமைக்கான அங்கீகாரம் மற்றும் கீர்த்தி உண்டாகும். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 3 
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : சாதகமான நாள். 
அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : அங்கீகாரம் கிடைக்கும்.


*🔯துலாம் ராசி*

வாகனப் பயணங்களில் கவனத்துடன் செயல்படவும். உறவினர்களிடம் சற்று அனுசரித்து செல்லவும். கடன் சார்ந்த சில பிரச்சனைகள் தோன்றி மறையும். மாணவர்கள் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனை சார்ந்த விவகாரங்களில் சற்று சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 7 
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம் 

சித்திரை : கவனம் தேவை. 
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.

*🔯விருச்சகம் ராசி*

தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பணிகளில் பொறுப்புகள் மற்றும் அதிகாரம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் மதிப்பு மற்றும் நட்பு கிடைக்கும். அறச்செயல்களால் நற்பேறு உண்டாகும். சுபச் செய்திகள் கிடைக்கும். 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 

விசாகம் : வெற்றி பெறுவீர்கள்.
அனுஷம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 
கேட்டை : நற்பேறு உண்டாகும்.

*🔯தனுசு ராசி*

சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வாதத்திறமையால் இலாபம் கிடைக்கும். அந்நியர்களால் தன விருத்தி உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புதிய வாகனங்கள் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். கால்நடைகளிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு  
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் 

மூலம் : மாற்றம் உண்டாகும். 
பூராடம் : ஆசிகள் கிடைக்கும். 
உத்திராடம் : முயற்சிகள் கைகூடும்.

*🔯மகரம் ராசி*


குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். மனச்சோர்வால் வேலையில் கவனமின்றி வசை சொற்களுக்கு ஆளாக நேரிடும். வெளியூர் பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். வெளிநாட்டு பணி விவகாரங்களில் முன்னேற்றமான சூழல் அமையும். குடும்பத்தில் பொருட்சேர்க்கை உண்டாகும். 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 

உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
திருவோணம் : கவனம் வேண்டும். 
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

*🔯கும்பம் ராசி*

தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். எண்ணிய எண்ணங்களில் காரியசித்தி உண்டாகும். பணியில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். 

அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 8 
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 

அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
சதயம் : ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.

*🔯மீனம் ராசி*

வாகனங்களால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விவாதங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் வேண்டும். ஆன்மீக பணிகளை மேற்கொள்வதால் கீர்த்தி உண்டாகும். வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : இலாபம் உண்டாகும். 
உத்திரட்டாதி : கவனம் வேண்டும். 
ரேவதி : கீர்த்தி உண்டாகும்.


                        

Post Top Ad