Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, September 24, 2019

அக்., 3க்கு பின், காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடத்த, பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்




அக்., 3க்கு பின், காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடத்த, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், காலாண்டு தேர்வுகள் முடிந்து, இன்று முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. வரும், 3ம் தேதி, மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதுவரை, பள்ளிகளில் வகுப்புகள் இயங்காது; ஆனால், நிர்வாகப் பணிகள் மட்டும் நடக்கும். இந்நிலையில், காந்தியடிகளின், 150வது பிறந்த நாளை, மத்திய அரசு விமரிசையாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு, அக்., 2 வரை, காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தை நடத்த, கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது, பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், மீண்டும் திறந்ததும், அக்., 3 முதல், காந்தி ஜெயந்தி விழாவை நடத்த, பள்ளிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. விடுமுறைகளில், காந்தியை ஓவியமாக வரையவும், காந்தி குறித்த பொன்மொழிகளை எழுதவும், காந்தியின் போராட்ட வாழ்க்கை குறித்து கட்டுரை எழுதவும், மாணவர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
LightBlog