அக்.1 முதல் வீடு, வாகன கடன்களின் வட்டி குறைப்பு - எஸ்.பி.ஐ அறிவிப்பு - Asiriyar.Net

Tuesday, September 24, 2019

அக்.1 முதல் வீடு, வாகன கடன்களின் வட்டி குறைப்பு - எஸ்.பி.ஐ அறிவிப்பு




வீடு, வாகனம், சிறுதொழில்களின் கடன்களுக்கான வட்டி விகிதம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் குறையும் என ‌பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கையில் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததோடு, அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.


அதன் தொடர்ச்சியாக, ரெப்போ விகிதத்துடன் கடன்களுக்கான வட்டி விகிதம் இணைக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் வீடு, வாகனம், சில்லறைக் கடன்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்கள் ஆகியவற்றை ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

Post Top Ad