29ம் தேதி ஆரம்பமாகிறது ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே! எல்லாமே கம்மி விலை தான் - Asiriyar.Net

Monday, September 23, 2019

29ம் தேதி ஆரம்பமாகிறது ஃப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே! எல்லாமே கம்மி விலை தான்



Flipkart big billion days Samsung Galaxy S9, Realme 3 Pro, Redmi smartphones, Apple XS ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி. தீபாவளி நெருங்கி வருவதால், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்க முடிவெடுத்துள்ளது ஃப்ளிப்கார்ட். ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே செப்டம்பர் மாதம் 29ம் தேதி துவங்கி அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெற உள்ளது.


சாம்சங் கேலக்ஸி எஸ்9 (Samsung Galaxy S9)

இந்த சலுகைத் திருவிழாவில் ஸ்மார்ட்போன்கள், டிவிகள் மிக குறைவான விலைக்கு விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனை ரூ.34,999-க்கு விற்பனைக்கு வைத்துள்ளது ஃப்ளிப்கார்ட். கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போனுக்கும் சிறப்பு தள்ளுபடி உள்ளது. ஆனால் விலையை இதுவரை வெளியிடவில்லை ஃப்ளிப்கார்ட் நிறுவனம்.

ரெட்மி ஸ்மார்ட்போன்கள்

ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 7,999 என்று பட்டியலிடப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ரெட்மி கே20 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன்களும் தள்ளுபடி விலைக்கு வைக்கப்பட்டுள்ளது. ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் விலை ரூ.3000 தள்ளுபடி செய்யப்பட்டு 24,999க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 7எஸ் ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 8,999க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ரியல்மீ 3


ரியல்மீ 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கும் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளாது. ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்த வருடம் ரூ. 13,999க்கு, ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது சலுகை விலையில் ரூ.11,999க்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Post Top Ad