Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, September 25, 2019

புருவங்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் இயற்கை வழிகள் !!




புருவங்களின் வளர்ச்சி மற்றும் அதன் அடர்த்தியை அதிகரிக்க சில எளிய இயற்கை வழிமுறைகள் உள்ளன. தினமும் கற்றாழை ஜெல்லை புருவங்களின் மீது தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுவதன் மூலம் புருவங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். இரவில் படுக்கும் முன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயைக் கொண்டு தினமும் புருவங்களின் மீது தடவி மசாஜ் மறுநாள் காலை எழுந்த பின் கழுவ வேண்டும். தினமும் பாலை 2 முறை புருவங்களின் மீது தடவி நன்கு காய்ந்த பின் கழுவ, புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும். வெங்காய சாறு அல்லது பேஸ்ட்டை புருவங்களின் மீது இரவில் படுக்கும் போது தடவி, மறுநாள் எழுந்தபின் கழுவ வேண்டும்.


தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி புருவங்களில் மசாஜ் செய்வதன் மூலமும் புருவங்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.


LightBlog