இஸ்ரோ தலைவர் சிவன் பரபரப்பு பேட்டி! சந்திரயான் 2 என்ன ஆனது தெரியுமா?! - Asiriyar.Net

Saturday, September 21, 2019

இஸ்ரோ தலைவர் சிவன் பரபரப்பு பேட்டி! சந்திரயான் 2 என்ன ஆனது தெரியுமா?!



கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி இந்தியா சந்திரயான் 2 வை விண்ணுக்கு அனுப்பியது. 48 நாட்கள் திட்டத்துடன் சென்ற சந்திரயான் 2, ஆர்பிட்டர், லேண்டர் விக்ரம், பிரக்யான் ரோவர் என்ற மூன்றையும் சேர்த்து பயணித்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கடைசி நிமிடத்தில் தகவல் தொடர்பை இழந்துவிட்டது. அதனிடமிருந்து எந்த ஒரு தகவலையும் அதன் பின் பெற முடியவில்லை. இதையடுத்து நாசாவின் உதவியுடன் விக்ரம் லேண்டரின் நிலைமையை கண்டறிய இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்து வந்தனர். ஆனால் அந்த முயற்சியும் கைகூடவில்லை.

விக்ரம் லேண்டர் தரையிறக்கப்பட்டு 14 நாட்கள் முடிந்துவிட்டதால், ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டும் என்பதால், இனிமேல் தொடர்பு கொள்ள முடியாது.

கல்வியாளர்கள் மற்றும் இஸ்ரோ வல்லுநர்களைக் கொண்ட தேசிய அளவிலான குழு லேண்டருடன் தொடர்பு இழப்புக்கான காரணத்தை ஆய்வு செய்து வருகிறது எனவும் இஸ்ரோ அறிவிக்கத்தது.

இந்நிலையில் இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் கே சிவன், சந்திரயான் -2 ஆர்பிட்டர் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. ஆர்பிட்டரில் 8 கருவிகள் உள்ளன. ஒவ்வொரு கருவியும் செய்ய வேண்டியதை மிகச் சரியாகச் செய்கின்றன. லேண்டர் விக்ரம் தரையிறங்குவதைப் பொறுத்தவரை, எங்களால் அதனுடன் மறுபடியும் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. தற்போது எங்கள் நோக்கம் அடுத்த இலக்கு எல்லாமே ககன்யான் திட்டத்திற்கானது என தெரிவித்துள்ளார்.

உலக விஞ்ஞான உலகையே திரும்பி பார்க்க வைக்கும் இஸ்ரோ குழுவினருக்கு வாழ்த்துகள்!

Post Top Ad