நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-இல் இடைத்தேர்தல் - Asiriyar.Net

Saturday, September 21, 2019

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு அக். 21-இல் இடைத்தேர்தல்





டெல்லி: தமிழகத்தின் சட்டசபை தொகுதிகளான நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. இதனால் அந்த 3 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் நண்பகல் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 3 மாநிலங்களுக்கும் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


இரு மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகம்
வாக்கு எண்ணிக்கை
அத்துடன் தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும். புதுவை காமராஜர்நகர் சட்டசபை தொகுதிக்கும் அக்.21-ஆம் தேதி நடைபெறுகிறது. இவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழகம்
வாக்கு எண்ணிக்கை
அத்துடன் தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும். புதுவை காமராஜர்நகர் சட்டசபை தொகுதிக்கும் அக்.21-ஆம் தேதி நடைபெறுகிறது. இவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.


பணப்பட்டுவாடா
தேர்தல் எப்போது?

இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தலின் போது பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் தேதி - அக்டோபர் 21
வாக்கு எண்ணிக்கை- அக்டோபர் 24
வேட்புமனு தாக்கல்- செப். 23
வேட்புமனு தாக்கல் முடிவு- செப். 30
வேட்புமனு பரிசீலனை- அக்டோபர் 1
வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள்- அக்டோபர் 3

என்றார் சுனில் அரோரா.


சட்டசபை தொகுதி
கன்னியாகுமரி தொகுதி

கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தொகுதியான நாங்குநேரி சட்டசபை உறுப்பினராக காங்கிரஸின் வசந்தகுமார் தேர்வானார். இந்த நிலையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.


காலியான நாங்குநேரி

காலியான விக்கிரவாண்டி

இதையடுத்து அவர் நாங்குநேரி தொகுதியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதுபோல் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவாக இருந்த ராதாமணி உடல்நல பாதிப்பால் காலமானார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது 

Post Top Ad