பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செப்.30-இல் நிறைவு: பள்ளிக் கல்வித்துறை - Asiriyar.Net

Saturday, September 21, 2019

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செப்.30-இல் நிறைவு: பள்ளிக் கல்வித்துறை




தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 30-ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நிறுத்திக்கொள்ள வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஏப்ரலில் மாணவர் சேர்க்கை தொடங்கும். தனியார் பள்ளிகளை பொருத்தவரை, மே மாதத்துக்குள் மாணவர் சேர்க்கையை முடித்து விடுவர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடத்தப்படும். தனியார் பள்ளிகளில் சான்றிதழ் கொடுத்து வெளியேற்றப்படும் மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து சேர்க்கப்படுகின்றனர். இது போன்ற பல காரணங்களால், ஆகஸ்ட் வரை மாணவர் சேர்க்கை நீடிக்கும்.

Post Top Ad