எரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 23, 2018

எரிபொருள் சேமிப்பிற்கான சில எளிய வழிகள்


பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. இது, தினசரி கார் பயன்படுத்துவோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெட்ரோல், டீசலுக்கு செலவிடும் தொகையை  கட்டுக்குள் வைத்திருக்க சில டிப்ஸ்...

* கார் மெதுவாக செல்லும்போது ஜன்னல் திறந்துவைத்திருந்தால் பரவாயில்லை. ஆனால், 20 கி.மீ வேகத்தை தாண்டிச்செல்லும்போது ஜன்னல்களை மூடிவிடுங்கள். அதேபோன்று, சன்ரூப் இருந்தாலும் மூடி வைப்பது நல்லது.  காரின் ஏரோடைனமிக்ஸில் பாதிப்பு ஏற்பட்டு அதிக எரிபொருள் செலவாகும். 
* காரில் கேரியர் மற்றும் ரூப் ஸ்கை பாக்ஸ் ஆகியவை இருந்தால் தேவைப்படாத நேரத்தில் கழற்றி வைத்துவிடுவது அவசியம். ஸ்கை பாக்ஸில் பொருட்கள் இல்லாமல் காலியாக இருந்தால்கூட அது ஏரோடைனமிக்ஸில்  பாதிப்பு ஏற்படுத்தி மைலேஜ் குறைய காரணமாகிவிடும். தற்போது வரும் கேரியர் மற்றும் ஸ்கை பாக்ஸ்களை எளிதாக கழற்றி மாட்ட முடியும். மேலும், கேரியர் மற்றும் ஸ்கை பாக்ஸ் எடையும் மைலேஜ் குறைய காரணமாக  இருக்கும். 


* காரை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில், எக்ஸ்ட்ரா பம்பர் உள்ளிட்ட தேவையில்லாமல் ஏராளமான ஆக்சஸெரீகளை பொருத்துவதால் அதிக எடையை சுமக்கும் நிலை ஏற்படுகிறது. இதுவும் எரிபொருள் சிக்கன அளவில்  பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோன்று, சிலர், கார் டிக்கியில் விளையாட்டு பொருட்கள், உடைமைகளை தேவையில்லாமல் போட்டு வைத்திருப்பதும் வழக்கம். இதுவும் மைலேஜ் குறைய வாய்ப்பை ஏற்படுத்தும். 
* காரை எடுத்தவுடன் அதிக ஆக்சிலரேட்டரை கொடுத்து உறுமச்செய்து எடுப்பது சிலரின் வாடிக்கை. இதுவும் தேவையில்லாத வேலை. காரை சில வினாடிகள் ஐட்லிங்கில் விட்டு எடுத்தால் போதுமானது. ஆக்சிலரேட்டரை  அதிகப்படியாக கொடுத்து எரிபொருளை வீணடிக்காதீர்கள். எரிபொருள் விரயத்தால் பணம் செலவு மற்றும் புகையால் காற்று மாசுபடுதலும் அதிகரிக்கிறது. 

* பொதுவாக கார் குறிப்பிட்ட வேகத்தை அடைந்ததும், சீரான வேகத்தில் இயக்குவது அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும். இதற்கு சரியான கியரில் இயக்குவது அவசியம். குறிப்பாக, டாப் கியரில் வைத்து சீரான வேகத்தில்  ஓட்டும்போது நீங்கள் நினைத்ததைவிட அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும். நெடுஞ்சாலையில் செல்லும்போது மணிக்கு 80 கி.மீ வேகத்தை கடைபிடிக்கும்போது மிக அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை பெற  முடியும். 
* அடிக்கடி பிரேக் பிடிப்பதும் எரிபொருள் விரயத்தை ஏற்படுத்தும். முன்னால் செல்லும் வாகனத்துடன் குறிப்பிட்ட இடைவெளியில் செல்வதும், நிதானமான வேகத்தை கடைபிடிப்பதும் நல்லது. முன்னால் செல்லும் வாகனத்தை  கணக்கில்கொண்டு ஓட்டும்போது, தேவையில்லாமல் பிரேக் பிடிப்பது தவிர்க்கப்படும். 
* மேலே சொன்ன காரணங்கள் மட்டுமின்றி, காரின் பராமரிப்பும் மிக முக்கியம். தயாரிப்பு நிறுவனத்தின் பரிந்துரையின்படி அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் சரியான பராமரிப்பில் வைத்திருப்பதும் அவசியம். 5,000 கிமீ  தூரத்திற்கு ஒருமுறை காருக்கு பராமரிப்புப் பணிகள் செய்வது அவசியமாகும். கார் இன்ஜின் பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் எப்போதும் இருக்கவேண்டும். மேலும், டயரில் காற்றழுத்தம் அளவையும் அவ்வப்போது  பரிசோதிப்பது அவசியம்.

Post Top Ad