முதலமைச்சரின் பதிலுக்காக தற்போது சென்னையில் குடும்பத்துடன் காத்திருக்கும் 8000 க்கும் இடைநிலை ஆசிரியர்கள் - Asiriyar.Net

Sunday, December 23, 2018

முதலமைச்சரின் பதிலுக்காக தற்போது சென்னையில் குடும்பத்துடன் காத்திருக்கும் 8000 க்கும் இடைநிலை ஆசிரியர்கள்


சம வேலைக்கு சமஊதியம் என்ற ஒற்றைக்கோரிக்கையை முன்வைத்து  இன்று இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஆரம்பிக்கும் முன்பாகவே அரசு  பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது .

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் நாளை (24 .12. 2018 )அன்று *_மாண்புமிகு தமிழக முதலமைச்சர்* அவர்கள் உடன் பேச்சுவார்த்தைக்கு_ *பள்ளிக்* *கல்வித்துறை* *அமைச்சர்* அவர்கள் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார்.


எனவே  நாளை நடைபெறவிருக்கும் முதல் அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாளை வரை  *தாம்பரம்* , *குரோம்பேட்டை* , *பல்லாவரம்* மற்றும் *கோயம்பேடு* போன்ற பல்வேறு(திருமண மண்டபங்களில் -3 மண்டபங்கள் நிரம்பி உள்ளது ) இடங்களில் தமிழகம் முழுவதும் இருந்து குடும்பத்துடன் வந்துள்ள 8000 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் *சென்னையில்* தங்கி உள்ளனர்

Post Top Ad