2013-ல் MCA உள்ளிட்ட 33 முதுநிலை படிப்புகளும் அரசு பணிகளுக்கு 'செல்லும்' என்று கூறிவிட்டு, இப்போது (2018) 'லாயக்கற்றவை' என கூறும் கல்வி (UGC) வாரியங்கள் = வைரலாகும் G.O (Ms) No.72 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, December 25, 2018

2013-ல் MCA உள்ளிட்ட 33 முதுநிலை படிப்புகளும் அரசு பணிகளுக்கு 'செல்லும்' என்று கூறிவிட்டு, இப்போது (2018) 'லாயக்கற்றவை' என கூறும் கல்வி (UGC) வாரியங்கள் = வைரலாகும் G.O (Ms) No.72





2013-ல் MCA உள்ளிட்ட 33 முதுநிலை படிப்புகளும் அரசு பணிகளுக்கு 'செல்லும்' என்று கூறிவிட்டு, இப்போது (2018) 'லாயக்கற்றவை' என கூறும் கல்வி (UGC) வாரியங்கள் = வைரலாகும் G.O (Ms) No.72
G.O (Ms) No.72 Dated : 30-04-2013

2013-ல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் "G.O (Ms) No.72 (Page No.4)


"MCA.," மற்றும் "M.Sc., (IT)" உள்ளிட்ட முதுநிலைப் பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைக்குச் செல்ல தகுதியானவை (Equivalent) என்று கூறி விட்டு... இப்போது (2018) பல இலட்சம் மாணவர்கள் இந்த பட்டங்களை படித்து முடித்த பின்னர் 'செல்லாது' என கூறுவது முற்றிலும் ஏமாற்று வேலை

"33 முதுநிலைப் படிப்புகள் அரசு வேலைக்குச் செல்வதற்கு லாயக்கற்றவை..." என்ற இந்த அறிவிப்பை "AICTE & UGC" உள்ளிட்ட கல்வி வாரியங்களும், 'தமிழக அரசும்' உடனே ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் (அ) வாபஸ் பெற வேண்டும்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் (2013) செல்லும் எனக்கூறிய பட்டப்படிப்புகள் இப்போது காலாவதியாகிவிட்டதா? என இந்த பட்டப் படிப்பை முடித்த முதுநிலை பட்டதாரிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளார்கள்.

'பல்கலைக்கழக மானியக் குழு (UGC), AICTE மற்றும் தமிழக அரசு ஆகியவை கூட்டாக சேர்ந்து தங்களை பழி வாங்கி விட்டார்கள்' என்பது இவர்களது பிரதான குற்றச்சாட்டு.

வேறு பாடப்பிரிவுகளை எடுத்து படித்திருந்தால் இன்று அரசு பணிகளுக்கு சென்றிருப்போம்... ஆனால், பல்கலைக்கழக மானியக் குழு இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது இந்த 33 முதுநிலை பட்டதாரிகளின் வாதமாக உள்ளது.
இந்த அறிவிப்பை 'ரத்து' செய்யத் தவறும்பட்சத்தில்... இந்த பாடப்பிரிவுகளை படித்த வருடத்திலிருந்து இன்றுவரையில் முழு இழப்பீட்டுத் தொகையையும் வழங்க அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இல்லையெனில், "உரிய இழப்பீடு கோரி" இதனால் பாதிக்கப்பட்ட, தமிழகத்திலுள்ள 5,00,000 பட்டதாரிகளின் மூலம் "காலவரையற்ற தொடர் போராட்டம்" நடத்தப்படும் எனவும் கூறியுள்ளனர்.

G.O ms 72 - Download Link : http://www.tn.gov.in/go_view/dept/12?page=1

Post Top Ad