வருமான வரி தாக்கல் : காத்திருக்கு அபராதம்! - Asiriyar.Net

Monday, December 24, 2018

வருமான வரி தாக்கல் : காத்திருக்கு அபராதம்!


வருமான வரி கணக்கை, டிச., 31க்குள் தாக்கல் செய்யாவிட்டால், இரட்டிப்பு அபராதத் தொகையை செலுத்த நேரிடும்.தனிநபர், நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு, வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு, ஜூலை, 31ல் முடிவடைந்தது. 

தணிக்கை செய்யப்பட்ட கணக்கை தாக்கல் செய்வதற்கு, நிறுவனங்களுக்கான அவகாசம், செப்., 30 வரை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 2017 - 18 நிதியாண்டுக்கான இந்த அவகாசம், அக்., 31 வரை நீட்டிக்கப்பட்டது.அதன்பின், 'டிச., 31 வரை, 5,000 ரூபாய் அபராதத்துடன் கணக்கை தாக்கல் செய்யலாம்' என, அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்தக் காலகட்டத்திலும் கணக்கை தாக்கல் செய்யாதோர், 2019, மார்ச், 31 வரை கணக்கை தாக்கல் செய்யலாம்; ஆனால், 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்த வேண்டும்.இதைத் தவிர, 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளோர், தாமதத்துக்கான கட்டணமாக, 1,000 ரூபாய் செலுத்த வேண்டும்.அதன்படி, இதுவரை, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதோர், வரும், 31க்குள் தாக்கல் செய்தால், இரட்டிப்பு அபராதத்தை தவிர்க்கலாம்.

Post Top Ad