உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் தொடக்கப் பள்ளியை இணைக்க எதிர்ப்பு - Asiriyar.Net

Monday, December 24, 2018

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் தொடக்கப் பள்ளியை இணைக்க எதிர்ப்பு



உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் தொடக்கப் பள்ளியை இணைக்க, தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்தது. அக்கூட்டணி மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாவட்டத் தலைவர் ராம்ராஜ் தலைமை வகித்தார். ஆலோசகர் அந்தோணிச்சாமி முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் ஜோசப்சேவியர் பேசியதாவது:

கல்வியாண்டு துவக்கம், இடையில் ஆசிரியர்கள் ஓய்வுபெற்றால் மாணவர்களின் நலன் கருதி பணிநீடிப்பு வழங்கப்பட்டது. இனி பணி நீடிப்பு கிடையாது என, அரசு உத்தரவிட்டது. மாணவர்கள் உளவியல் ரீதியாக பாதிப்பதோடு, கற்றல், கற்பித்தலில் தொய்வு ஏற்படும். செலவை குறைப்பதாக கூறி, மாணவர்கள் நலனை கேள்விக்குறி ஆக்கியுள்ளனர்.உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் தொடக்கப் பள்ளிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒரே தலைமைஆசிரியர் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கவனிப்பது சிரமம். இதனால் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்படுவர்.


ஏற்கனவே நீட் தேர்வை எதிர்கொள்ள மேல்நிலைக் கல்விக்கென தனியாக துறை ஏற்படுத்த வலியுறுத்தி வருகின்றனர். அந்த சூழ்நிலையில் பள்ளிகளை இணைப்பது மாணவர்களை நலனை பாதிக்கும், என்றார்.மாவட்ட பொருளாளர் பாண்டியராஜன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் அய்யாச்சி, சாமுவேல், செயலாளர்கள் ஜஸ்டின்திரவியம், சுரேஷ், நாகராஜ், நிர்வாகிகள் பெரியசாமி, மாசானம் பங்கேற்றனர்.

Post Top Ad