ட்ரூகாலர் மூலம் போன் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யலாமா?› - Asiriyar.Net

Sunday, September 16, 2018

ட்ரூகாலர் மூலம் போன் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யலாமா?›




ஒரு உரையாடல் எப்படி நடந்தது என்பதை பின்னர் யோசித்து பார்ப்பதற்கும், உண்மையாக நடந்த உரையாடலுக்கும் நிச்சயம் சிறு வித்தியாசமாவது இருக்கும். நடந்த உரையாடலை மீண்டும் கேட்டால் ஏற்கனவே செய்த சில தவறுகளை திருத்திக்கொள்ளலாம். சில ஸ்மார்ட்போன்களிலும் மட்டுமே போன் உரையாடல்களை பதிவு செய்யும் வசதி இருக்கும் நிலையில், மற்றவற்றில் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி மட்டுமே நம்மால் உரையாடல்களை பதிவு செய்ய முடியும்.

போன் செய்பவர்களின் விவரங்களை அறிவதற்கு உதவும் பிரபல செயலியான ட்ரூகாலர், சமீபத்தில் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வசதியை படிப்படியாக அனைவருக்கும் வழங்கிவருகிறது.


துருதிஷ்டவசமாக, இந்தவசதியை பயனர்கள் பயன்படுத்த வேண்டுமெனில் பீரிமியம் மெம்பர்சிப் பெற்றிருக்கவேண்டும். ஆனால் இச்செயலியை 14 நாட்களுக்கு பரிச்சார்த்த முறையில் இலவசமாக பயன்படுத்தலாம். பீரிமியம் மெம்பர்சிப் பெறுவதற்கு மாதகட்டணமாக ரூ49அல்லது ஆண்டு கட்டணமாக ரூ449 செலுத்தவேண்டும்.

ட்ரூகாலர் செயலியில் அழைப்புகளை பதிவு செய்யும் வசதியை பயன்படுத்த பின்வரும் வழிமுறையை பின்பற்ற வேண்டும்.

படி1:
உங்களிடம் ஏற்கனவே ட்ரூகாலர் செயலி இல்லையென்றால், டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளவும். செயலி இருந்தால் லேட்டஸ்ட் வெர்சனுக்கு அப்டேட் செய்யவும்.


படி2:
ஏற்கனவே இருக்கும் ட்ரூகாலர் ஐடி அல்லது ஐடி இல்லையெனில் புதிய ஐடி உருவாக்கி, செயலியில் உள்நுழையவும்.


படி3:
ட்ரூகாலர்செயலியின் ஹோம்பேஜ்-க்கு செல்லவும். இடது புறம் உள்ள 'ஹம்பர்கர்' மெனுவை கிளிக் செய்து , 'கால் ரெக்கார்டிங்' வசதியை கிளிக் செய்யவும்.


படி4:
நீங்கள் ஏற்கனவே ப்ரிமியம் வெர்சனை பெறவில்லை எனில், ட்ரையல் வெர்சனை துவங்குவதற்கான தேர்வுகளை அங்கு காணமுடியும். அதற்கான விதிமுறைகளை ஒப்புக்கொண்ட பிறகு, அச்செயலி பதிவு செய்வதற்கும், பதிவு செய்தவற்றை உள்ளார்ந்த சேமிப்பில் சேமிக்கவும் அனுமதி அளிக்க வேண்டும்.


படி5:
மேற்கூறிய அனைத்து படிகளையும் செய்து முடித்த பின்னர், அடுத்த திரையில் உள்ள 'வ்யூ ரெக்கார்டிங் செட்டிங்ஸ்'ஐ கிளிக் செய்யவும். அங்கு 'ஆட்டோ' அல்லது 'மேனுவல்'என்ற இரு மோட்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். 'ஆட்டோ' வசதியை பயன்படுத்தினால்,அழைப்புகள் வரும் போது தானாகவே பதிவு செய்யப்படும். 'மேனுவல்' வசதியில், ஒவ்வொரு முறை அழைப்பு வரும்போதும் ரெக்கார்ட் செய்யலாமா என உறுதி செய்ய சிறு ஐகான் திரையில் தோன்றும். இம்முறையில் பதிவு செய்ய துவங்கும் போதும், முடிக்கும் போதும் அதற்கேற்ப பொத்தான்களை தெரிவு செய்ய வேண்டும்.


ஆண்ராய்டு 9 பை
நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு உரையாடலும் தனித்தனியாக, போனின் உள்ளார்ந்த சேமிப்பில் சேமிக்கப்படும். ஆனால் இவற்றை வெளிப்புற சேமிப்பில் சேமிக்கும் வசதி இல்லை என்பது ஒரு குறையாக உள்ளது.

ஆண்ராய்டு 9 பை-ல் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளதை நினைவிற்கொள்க. பிக்சல் 2 எக்ஸ்.எல்-ஐ பரிசோதிக்கும் போது இவ்வசதியை பயன்படுத்த முடியாது என்பது கண்டறியப்பட்டது. எனவே நீங்கள் ஆண்ராய்டு பை பயன்படுத்த நேர்ந்தால், கூகுள் இவ்வசதியை அனுமதிக்கும் வரை ட்ரூகாலர் பயன்படுத்தியும் அழைப்புகளை பதிவு செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad