பிளஸ்2 துணைத்தேர்வு ஹால்டிக்கெட்: இணைய தளத்தில் பதிவிறக்கலாம் - Asiriyar.Net

Saturday, September 15, 2018

பிளஸ்2 துணைத்தேர்வு ஹால்டிக்கெட்: இணைய தளத்தில் பதிவிறக்கலாம்



பிளஸ் 2 துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை பெறுவது பற்றி தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்கான துணைத் தேர்வு தற்போது தொடங்க உள்ளதால், மேற்கண்ட தேர்வு எழுத விண்ணப்பித்த, (தக்கல் உள்பட) மாணவ, மாணவியர் 17ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மேற்கண்ட இணைய தளத்தில் சென்று பிளஸ்2 இரண்டாம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் 2018 ஹால்டிக்கெட் டவுன்லோடு என்று கிளிக் செய்து விண்ணப்ப எண் பிறந்த தேதியை பதிவு செய்தால் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

எழுத்து தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வை மீண்டும் செய்வதோடு எழுத்து தேர்வும் எழுத வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுக்கு வர வேண்டும். செய்முறைத் தேர்வு தொடர்பான விவரங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் தெரிந்து கொள்ளலாம். 

Post Top Ad