பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர் இன்று பிற்பகல் தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள (தக்கல் உள்பட) மாணவ, மாணவியர் இன்று பிற்பகல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அறிவியல் பாடத்துக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்படும் அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். தேர்வு நடக்க உள்ள பள்ளிகளின் விவரங்கள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் தெரிந்து கொள்ள வேண்டும்.