ஓட்டுநர் உரிமம்: இனி டிஜிட்டல் ஆவனமே போதுமானது: மத்திய அரசு உத்தரவு - Asiriyar.Net

Saturday, August 11, 2018

ஓட்டுநர் உரிமம்: இனி டிஜிட்டல் ஆவனமே போதுமானது: மத்திய அரசு உத்தரவு

வாகன ஓட்டுநர் உரிமம் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. டிஜி லாக்கர் மற்றும் மொபைல் செயலி இருந்தாலே போதுமானது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

தனி மனிதரின் ஆவனங்களை பாதுகாக்க 'டிஜிலாக்கர்' சிஸ்டத்தை மத்திய அரசு ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் ஒவ்வொரு வரும் தமது ஆதார் அடையாள எண், வங்கி கணக்கு விவரங்கள் போன்ற முக்கிய ஆவனங்களை டிஜிட்டல் முறையில் சேமித்து வைத்துக் கொள்ள லாம். தேவையான போது இதை திறந்து ஆவனங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சேவைக்கு 'மின்பூட்டு' எனப்படும் (DIGI LOCKER) டிஜிலாக்கர் சிஸ்டத்தை மத்திய அரசு அறிமுகப் படுத்தி உளளது.அதுபோல சமீபத்தில் வாகன ஓட்டுனர் உரிமம் தொடர்பாக எம்பரிவாகன் (mparivahan app) என்ற மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இதுபோன்ற டிஜிட்டல் செயலிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் ஆவனங்களை வாகன ஓட்டிகள் காவல்துறையிடம் காண்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துஉள்ளது.வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல்துறையினரின் சோதனையின்போது, ஓட்டுநர் உரிம அட்டைகளை காண்பிக்க கூறுவது வழக்கம். இதுபோன்ற சமயங்களில் வாகன ஓட்டுனர்உரிமம் தவறுதலாக எடுத்து வர மறந்தவர்கள், அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படு கிறார்கள். டிஜிட்டல் வடிவிலான வாகன ஓட்டுநர் உரிமம்,வாகன பதிவு ஆவணங்களை போக்கு வரத்து காவல்துறையினர் ஏற்க மறுத்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எழுகிறது.இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டது.அதன் அடிப்படையில் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் காவல்துறையினரிடம் ஓட்டுநர் உரிமத்தினை மொபைல் செயலி மூலம் காண்பித்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி வாகனஓட்டிகளிடம் டிஜிட்டல் வடிவிலான ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங் களை ஏற்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அரசின் அதிகரப்பூர்வ மொபைல் செயலிகளான எம்பரிவாகன் (mparivahan app) டிஜி லாக்கர் (DigiLocker) ஆகிய செயலிகளில் காண்பிக்கப்படும் ஆவணங்களை ஏற்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

Post Top Ad