ஜியோ போன் 2-இன் மூன்றாம் கட்டவிற்பனை வரும் செப்டம்பர் 6ம் தேதி அன்று ஜியோ நிறுவனத்தின் த்தின் Jio.com இணயதளத் தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நண்பகல் ஜியோ போன் 2 முதன்முதலாக விற்பனைக்கு வந்தது. ஃப்ளாஷ் சேல் என்பதால் சில நிமிடங்களிலேயே மளமளவென்று விற்றுத்தீர்ந்தது. Add to cart வரை வந்த பலருக்குள் அதற்குள் கூட்டம் அதிகமாகி Page under maintenance என்று செய்தி மட்டுமே வந்தது.
ஏற்கனவே இதன் முந்தைய வடிவம் அறிமுகமான ஒரே ஆண்டில் இரண்டரை கோடி போன்கள் விற்று சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. QWERTY விசைப்பலகையுடன் கூடிய 2.4” டிஸ்பிளே (320*240) உடையது இப்புதிய போன். இப்போனை வாங்குகையில் 49ரூ, 99ரூ, 153ரூ ஆகிய மூன்று பிளான்களில் ஏதேனும் ஒன்றை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஸ்மார்போன் வரும் செப்டம்பர் 6ம் தேதி அன்று மூன்றாம் கட்டமாக விற்பனைக்கு வருகிறது. இதில் ஜியோ போனில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே (KaiOS) ஆப்ரேடிங் சிஸ்டமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது.
இதில் மைக்ரோ சிப் மூலம் கூடுதலாக 128 ஜிபி ஸ்டோரேஜை இணைக்க முடியும். 2.4 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 2 எம்.பி பின்புறம் கேமரா உள்ளது. அத்துடம் 2 எம்.பி விஜிஏ செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து அப்ஸ்களையும் பயன்படுத்த முடியும்.