கும்பகோணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் திடீர் ஆய்வு செய்தார். அமைச்சரின் திடீர் ஆய்வு பள்ளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பூம்புகார் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ பவுன்ராஜ் மகன் திருமணம் திருக்கடையூரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் கும்பகோணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்ற அமைச்சர் செங்கோட்டையன் நேராகத் தலைமை ஆசிரியர் வகுப்பறைக்குச் சென்றதோடு அங்குள்ள ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.