அரசு ஊழியர்கள் இனி கண்ணீர் விடப்போகிறார்கள்.. கண்ணில் வேலினை பாய்ச்சும் அரசின் அதிரடி அறிவிப்பு! - Asiriyar.Net

Thursday, August 30, 2018

அரசு ஊழியர்கள் இனி கண்ணீர் விடப்போகிறார்கள்.. கண்ணில் வேலினை பாய்ச்சும் அரசின் அதிரடி அறிவிப்பு!

மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் சுமார் 80 சதவிகித பணம், அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கே
செலவிடப்படுகிறது என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருக்கிறது.

அதிலும் பத்து வருடங்களுக்கு ஒரு முறை குழு அமைத்து, ஒரே அடியாக கணிசமாக சம்பளத்தை உணர்த்தும் நடைமுறையும் இருந்து வருகிறது.

தற்போது ஏழாவது ஊதியக்குழுவின் சம்பள பரிந்துரை அமலில் உள்ளது. இதனை இந்தியா முழுவதும் ஒரே சீராக அமல்படுத்த வேண்டி அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

தற்போதைய நடைமுறையின் படி, மத்திய அரசில் குறைந்த பட்ச சம்பளமாக 18 ஆயிரம் ரூபாயும், அதிகபட்சமாக இரண்டரை லட்சம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் மாநில அரசின் ஊதியமும் மாற்றியமைக்கப்பட்டது.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்க இருப்பதால், குறைந்தபட்ச ஊதியத்தை 20 ஆயிரமாக மாற்றி அமைக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனால் அரசுக்கு மேலும் செலவினம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இனி ஊதியக்குழு அமைத்து சம்பளத்தை பரிந்துரை செய்யும் முறை விலக்கிக்கொள்ளப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வருடா வருடம் கொடுக்கப்படும் ஊதிய உயர்வு மட்டுமே அமலில் இருக்கும் என்றும், விலைவாசி அதிகரிப்புக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வு மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad