உலக வரலாற்றில் இன்று 20.08.2018 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, August 20, 2018

உலக வரலாற்றில் இன்று 20.08.2018

ஆகஸ்டு 20 (August 20) கிரிகோரியன் ஆண்டின் 232 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 233 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 133 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

  • 636 – அரபுப் படைகள் பைசண்டைன் பேரரசிடம் இருந்து சிரியா, பாலஸ்தீனம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
  • 1000 – ஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபன் என்பவனால் உருவாக்கப்பட்டது.
  • 1866 – அமெரிக்க அதிபர் அண்ட்ரூ ஜோன்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
  • 1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சை ஜேர்மனியப் படைகள் கைப்பற்றின.
  • 1917 – இலங்கையில் ஒரு ரூபாய்த் தாள் வழங்கப்பட்டது.
  • 1940 – மெக்சிக்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் ரஷ்யப் புரட்சியாளர் லியோன் ட்ரொட்ஸ்கி படுகாயமுற்று அடுத்த நாள் மரணமானார்.
  • 1944 – இரண்டாம் உலகப் போர்: ருமேனியா மீது சோவியத் ஒன்றியம் தாக்குதலை ஆரம்பித்தது.
  • 1948 – “இலங்கை குடியுரிமை சட்டம்” இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 10 இலட்சம் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
  • 1953 – ஐதரசன் குண்டைத் தாம் சோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
  • 1960 – செனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.
  • 1968 – பனிப்போர்: 200,000 வார்சா ஒப்பந்த நாடுகளின் படைகள் செக்கோஸ்லவாக்கியாவினுள் புகுந்தன.
  • 1975 – நாசா வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.
  • 1977 – நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.
  • 1988 – ஈரான் – ஈராக் போர்: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.
  • 1991 – எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.
  • 1997 – அல்ஜீரியாவில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 2006 – அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006: கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணமால் போனார்கள்.
  • 2006 – நமது ஈழநாடு பணிப்பாளர், முன்னாள் யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமகராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.


பிறப்புக்கள்

  • 1847 – அன்றூ கிரீன்வூட், ஆங்கிலேயெத் துடுப்பாளர் (இ. 1889)
  • 1865 – பெர்னாட் டென்கிரேட், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (இ. 1911)
  • 1890 – எச். பி. லவ்கிராஃப்ட், அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. 1937)
  • 1910 – ஈரோ சாரினென், கட்டிடக்கலைஞர் (இ. 1961)
  • 1944 – ராஜீவ் காந்தி, இந்தியப் பிரதமர், (இ. 1991)
  • 1946 – நா. ரா. நாராயண மூர்த்தி, இந்தியத் தொழிலதிபர்
  • 1951 – முகம்மது முர்சி, எகிப்திய அரசியல்வாதி, 5வது அரசுத்தலைவர்
  • 1974 – ஏமி ஆடம்சு, அமஎரிக்க நடிகை, பாடகி
  • 1983 – ஆண்ட்ரூ கார்பீல்ட், அமெரிக்க-ஆங்கிலேய நடிகர்
  • 1992 – டெமி லோவாடோ, அமெரிக்க நடிகை


இறப்புகள்

  • 984 – பதினான்காம் யோவான் (திருத்தந்தை)
  • 1854 – பிரீடரிக் ஷெல்லிங், ஜெர்மன் மெய்யியல்லாளர் (பி. 1775)
  • 1912 – வில்லியம் பூத், இரட்சணிய சேனையின் நிறுவனர்களில் ஒருவர் (பி. 1829)
  • 1914 – பத்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1835)
  • 2006 – சி. சிவமகராஜா, ஈழத்து அரசியல்வாதி, பத்திரிகையாளர்
  • 2013 – நரேந்திர டபூக்கர், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1945)
  • 2014 – பி. கே. எஸ். அய்யங்கார், யோகா ஆசிரியர் (பி. 1918)

Post Top Ad