பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்: தமிழக அரசின் முடிவு என்ன? - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 7, 2022

பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்: தமிழக அரசின் முடிவு என்ன?

 
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாகவே பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை... மாணவர்களும் ஆன்லைன் மூலம்தான் படித்து வந்தனர்.. ஆன்லைனில்தான் தேர்வுகளும் நடந்து வந்தது..


இதையடுத்து, கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.. மேலும் தேர்வுகளுக்கான கால அட்டவணையும் வெளியாகி உள்ளன.


கோடை வெயில்


இந்நிலையில், வெயில் இப்போதே தமிழகத்தை வாட்ட துவங்கிவிட்டது.. வரும் மோ மாதம் இந்த வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.. எப்போதுமே இந்த கோடை வெயிலை கணக்கிட்டுதான், கோடை விடுமுறைகளை அரசும் அறிவித்து வருகிறது.. ஆனால், ஏப்ரல் மாதமே வெயில் தாக்கம் உச்சத்துக்கு வந்துள்ளதால், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


இளமாறன்


எனவே, பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.. தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இளமாறன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கையை விடுத்துள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:


கோட்டை


முதல்வருக்கு "ஆட்சி பொறுப்பேறற்றதிலிருந்து தமிழகத்தை இந்திய மாநிலங்களிலேயே முதன்மை மாநிலமாக மாற்றிவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப் பாராட்டுகிறேன். மேலும்கோடை விடுமுறை காலத்தில் பள்ளி நடைபெறக்கூடிய காலகட்டங்களில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். கடந்த காலங்களை காட்டிலும் வெயிலின் உக்கிரம் இந்த வருடம் ஆரம்பத்திலேயே கூடுதலாக உள்ளது.


சுட்டெரிக்கும் வெயில்


“கடந்த காலங்களை காட்டிலும் வெயிலின் உக்கிரம் இந்த வருடம் ஆரம்பத்திலேயே கூடுதலாக உள்ளது. நாடு முழுதும் சுட்டெரிக்கும் வெயிலை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் இயங்கும் நேரம் சில மாநிலங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் பள்ளி நேரம் என்பது காலை 8 மணிக்கு தொடங்கி 11 மணிக்குள் நிறைவடைந்து விடுகிறது. அதேபோல கர்நாடகத்தில் தேர்வு வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இப்போதே வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.


சகஜத்தன்மை


எதிர்வரும் காலங்களில் வெய்யில் உச்சத்தைத் தொடும். வெய்யிலின் தாக்கத்தினால் பல்வேறு சரும நோய்கள், காய்ச்சலால் குழந்தைகளுக்கு சகஜத்தன்மை மாறுகின்றது. உடலும் உள்ளமும் ஒருசேர ஒழுங்காக இருந்தால் மட்டுமே கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடக்கும். தற்போது 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மே 13 வரைக்கும் 10 முதல் 12 வரை மே 30 வரை திட்டமிடபட்டுள்ளது.


கோரத்தாண்டவம்


வெய்யிலின் கோரத்தாண்டவத்தை சமாளிக்கும் வகையில் மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளி நேரத்தை காலை 7.30 லிருந்து 12.30 வரை மாற்றியமைத்து மாணவர்களை பேணும்படி முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவர்களின் நலன்கருதி, பள்ளிகளின் நேரம் விரைவில் மாற்றியைமக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.Post Top Ad