SBI ATM Card வைத்திருப்பவர்கள் கண்டிபாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, December 13, 2021

SBI ATM Card வைத்திருப்பவர்கள் கண்டிபாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்!

 




SBI டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் வீட்டில் இருந்தே எப்படி டெபிட் கார்டு பின் அல்லது கிரின் பின்னை மாற்றுவது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் லட்சகணக்கான மக்கள் சேமிப்பு கணக்கு, சேலரி கணக்கு, கரண்ட் அக்கவுண்ட்களை செயல்பாட்டில் வைத்துள்ளனர். இந்த வங்கியில் செயல்படும் அனைத்து விதமான சேமிப்பு கணக்குகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு வழங்கப்படுகிறது. இந்த கார்டு பின் நம்பரை தேவைப்பட்டால் வாடிக்கையாளர்கள் மாற்றிக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏடிஎம் செல்லலாம், வங்கிக்கு நேராகவும் செல்லலாம் அல்லது வீட்டில் இருந்து கூட 5 நிமிடத்தில் பின் எண்ணை மாற்றலாம். அந்த வசதி குறித்து தான் இங்கு விரிவாக பார்க்க போகிறீர்கள். எஸ்பிஐ டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள்  கிரீன் பின்னை எப்படி வீட்டில் இருந்தே மாற்றலாம் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.


இதற்கு வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் உங்கள் கையில் இருந்தாலே போதும்.அந்த நம்பரில் இருந்து 1800-1234 என்ற கட்டணமில்லா எஸ்பிஐயின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு ஃபோன் செய்ய வேண்டும். அதில் ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு தொடர்பான சேவைகளை பெற நம்பர் 2வை அழுத்த வேண்டும்.


இதில் கிரீன் பின்னை உருவாக்க நம்பர் 1ஐ அழுத்த வேண்டும். பின்பு ATM கார்டின் கடைசி 5 இலக்கங்களை உள்ளிட வேண்டும். அதை உறுதிப்படுத்த 1 நம்பரை அழுத்த வேண்டும். உங்கள் அக்கவுண்டின் கடைசி 5 எண்களை பதிவு செய்ய வேண்டும். அதை உறுதிப்படுத்த மீண்டும் 1 நம்பரை அழுத்த வேண்டும். கடைசியாக நீங்க பிறந்த தேதியை சரியாக பதிவிட வேண்டும்.


அவ்வளவு தான் உங்கள் டெபிட் கார்டின் கிரீன் எண் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மெசேஜாக வரும். இந்த எண்ணை வாடிக்கையாளர்கள் 24 மணி நேரத்திற்குள் எஸ்பிஐ ஏடிஎம்களை அணுகி மாற்றிக் கொள்ளலாம்.



Post Top Ad