வில்லங்க சான்றிதழில் உள்ள மாறுபாடுகளை ஆன்லைன் மூலம் திருத்தம் செய்யும் வசதி அறிமுகம் - தமிழ் நாடு அரசு! - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, December 2, 2021

வில்லங்க சான்றிதழில் உள்ள மாறுபாடுகளை ஆன்லைன் மூலம் திருத்தம் செய்யும் வசதி அறிமுகம் - தமிழ் நாடு அரசு!

 

மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக அத்துறையில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


தற்போது 1975 ஆம் ஆண்டு முதல் நாளது தேதிவரையிலான காலத்திற்கான வில்லங்கச்சான்றுகள் விரைவுக்குறியீடு மற்றும் சார்பதிவாளரின் மின்கையொப்பம் இட்டு அலுவலகம் வராமல் ஆன்லைன் வழி வழங்கப்பட்டு வருகிறது . ஆவணத்தில் உள்ள விபரத்திற்கும் வில்லங்கச்சான்றில் உள்ள விபரத்திற்கும் ஏதேனும் மாறுபாடுகள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பங்களை அளிக்கும் நடைமுறை தற்போது உள்ளது.


இதனால் பொதுமக்களுக்கு காலவிரயமும் சிரமமும் ஏற்படுகிறது . நேரில் சென்று விண்ணப்பம் அளிப்பதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு வில்லங்கச்சான்றில் உள்ள விபரங்களில் திருத்தங்கள் செய்ய ஆன்லைன் வழி விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.


 வில்லங்கச்சான்றில் உள்ள விபரங்களில் திருத்தங்கள் செய்ய பதிவுத்துறையின் இணையதளத்தில் " அட்டவணை தரவு திருத்தம் " என்ற தெரிவின் வழி சென்று ஆன்லைன் வழி விண்ணப்பிக்க பொதுமக்கள் கோரப்படுகிறார்கள் . விண்ணப்பங்கள் ஆன்லைன் வழி பெறப்பட்டு சார்பதிவாளரால் சரி பார்க்கப்பட்டு மாவட்டப்பதிவாளரின் ஒப்புதலுடன் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்படுகிறது.


Post Top Ad