Bank Loan : தெரியாம கூட இந்த தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, December 13, 2021

Bank Loan : தெரியாம கூட இந்த தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க!

 




வாகனங்கள் வாங்குவது முதல் வீடுகள் வாங்குவது வரை மக்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றி கொள்ளும் வகையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மக்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றன. தற்போது கார்கள் என்பது ஆடம்பரத்திற்காக மட்டுமே இல்லாமல் அத்தியாவசியத்திற்காகவும் வாங்கப்படும் வாகனமாக மாறி இருக்கிறது. நீங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் கார் வாங்குவதை கனவாக கொண்டிருப்பின், இந்த பெரிய கனவை செயல்படுத்த அடுத்து அடுத்து நடவடிக்கையில் இறங்குவது முக்கியமான படியாகும்.


உங்கள் குடும்பம் மற்றும் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையிலான அதே சமயம் சிறந்த டிசைன், மாடல் மற்றும் சிறப்பம்சங்களை கொண்ட நல்ல தரமான நிறுவனத்தின் காரை தேர்வு செய்வது உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கின்றன. இறுதியாக அதற்கு தேவையான நிதியை ஏற்பாடு செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.


பொதுவாக வங்கிகள் 3 வகையான கார் கடன்களை வழங்குகின்றன. புதிய கார்களை வாங்குவதற்கான கடன்கள் (new car loans), பயன்படுத்திய கார்களை வாங்குவதற்கான கடன்கள் (used car loans) மற்றும் கார்கள் மீதான கடன்கள் (loans against cars). இதில் மூன்றாவதாக இருக்கும் கார்கள் மீதான கடன்கள் என்பது தற்போதைய கார் கடனில் டாப்-அப் கடனை பெறுவதற்கான வழி முறையாகும்.


வேறு ஏதேனும் அவசரத்திற்கு நிதி தேவைப்பட்டால் இது ஒரு சிறந்த வழி. உயர்கல்வி, வீட்டை புதுப்பித்தல், பணி மூலதனம் போன்ற பல தேவைகளுக்கு நிதி ஏற்பாடு செய்ய கார் மீதான கடன் உதவுகிறது. loans against cars கடனை வங்கி அல்லது நிதி நிறுவனங்களை அணுகி கடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தற்போதைய காரின் மதிப்பில் 95% வரை நிதியை பெறலாம். தற்போது இதில் நாம் new car loans பற்றி சற்று விரிவாகவே பார்ப்போம்.


வட்டி விகிதம்..


புதிதாக கார் வாங்குவதற்கு தேவையான நிதியாக, காரின் ஆன்-ரோடு விலையில் 90% முதல் 100% வரை கடனாக பெறலாம். அதே போல கார் கடனுக்காக விண்ணப்பிக்கும் போது, நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிப்பது முக்கியம். கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருக்கும் பட்சத்தில் கடனானது விரைவாக அங்கீகரிக்கப்படுவதை தவிர, கடன் வழங்குநர்கள் குறைந்த வட்டி விகிதங்களில் கடனை வழங்குவார்கள் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. கார் கடனை பெறுவதற்கு செக்யூரிட்டி அல்லது பிணையம் தேவையில்லை.


காரே செக்யூரிட்டியாக செயல்படுகிறது. கார் கடனை தேர்வு செய்யும் போது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் வட்டி விகிதம். ஏற்கனவே அறிமுகமான வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் அளிக்க சில வங்கிகள் முன்வரும். சில வங்கிகள் ஆண்டுக்கு 8 - 9.5% வரையிலான விகிதத்தில் கடன்களை வழங்கி வருகின்றன. கார் கடனை பெறும் முன் பல வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்ப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் வட்டி விகிதத்தில் காணப்படும் சிறிய வேறுபாடு கூட, நீங்கள் திருப்பி செலுத்த வேண்டிய தொகையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.


கடனை அடைக்கும் காலம்..


கார் கடனை திருப்பி செலுத்தும் காலத்தை புத்திசாலித்தனமாக தேர்வு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, 7 வருட கடன் காலத்திற்கு நீங்கள் சிறிய EMI தொகையை தேர்வு செய்கிறீர்கள் என்றால், அந்த 7 ஆண்டுகளில் மொத்தமாக நீங்கள் திருப்பிச் செலுத்தும் தொகையை நீங்கள் கணக்கிட்டால் அதிர்ச்சிக்குள்ளாகலாம். ஏனென்றால் கடன் தொகையுடன் ஒப்பிடும் போது கடனை நீங்கள் திருப்பி செலுத்த தேர்வு செய்யும் காலம் தான் வட்டி விகிதத்துடன் EMI-யை . தீர்மானிக்கிறது. எனவே கடனை குறைந்தபட்ச காலத்தில் திருப்பி செலுத்தும் repayment tenure-ஐ தேர்ந்தெடுப்பது விவேகமானது.


திட்டங்கள் மற்றும் சலுகைகள்..


கார் கடன்களை வழங்கும் பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பல சலுகைகள் மற்றும் டீல்களை வழங்குகிறார்கள். சிறந்த கிரெடிட் ப்ரொஃபைல் உங்களிடம் இருந்தால் உங்களால் கஸ்டமைஸ்டு டீல்களை கூட பெற முடியும்.


இப்போது சரியான கார் கடனை தேர்வு செய்ய நீங்கள் வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவைகளை பற்றி பார்க்கலாம் வாருங்கள்..


செய்ய வேண்டியவை..


* உங்களுக்குத் தேவையான கடன் தொகையுடன் சிறந்த வட்டி விகிதத்தை வழங்கும் கடனை தேர்வு செய்வது நல்ல முடிவாக இருக்கும்.


* கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் ஒரு காரை தேர்வு செய்து, அந்த காரின் விலை உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றதா என்பதை குடும்ப உறுப்பினர்களுடன் கலந்ததாலோசித்து உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.


* சில நேரங்களில் கடன் திட்டங்கள் வெளிப்படையாக இருந்தாலும் மறைமுக கட்டணங்கள் இருக்க கூடும். எனவே கார் கடன் தொடர்பாக ஏதேனும் மறைமுக கட்டணங்கள் விதிக்கப்படுமா என்பதை அலசி ஆராய்வது முக்கியம்.


* சிறப்புச் சலுகைகள் இருந்தால் அதனை கேட்டு பெற தவறாதீர்கள்.


* தவறாமல் காரின் இன்ஷுரன்ஸ் பிரீமியத்தை சரி பார்க்க வேண்டும்.


* அதிக முன்பணம் செலுத்தி கார் வாங்கும் போது குறைந்த கடன் தொகை தான் இருக்கும் என்பதால் வங்கிகள் அல்லது கடன் வழங்குபவர்கள் உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கார் கடனை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடன் தொகை குறைவாக இருந்தால், விரைவாக திருப்பி செலுத்தி விட முடியும். எனவே முடிந்தால் அதிக முன்பணம் செலுத்தி காரை எடுப்பது உங்கள் மீதான கடன் சுமை குறைவாக இருப்பதை உறுதி செய்யும்.


செய்ய கூடாதவை..


* எப்போதுமே உங்கள் எலிஜிபிலிட்டிக்கு அதிகமான கடன் தொகையை கேட்டு விண்ணப்பிக்காதீர்கள். ஏனென்றால் இதுவே உங்கள் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்க முக்கிய காரணமாக இருந்து விடும்.


* அதே போல கார் வாங்க கடன் கேட்டு பல வங்கிகளில் விண்ணப்பிக்க வேண்டாம். இது உங்கள் கிரெடிட் ஸ்கோரில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.


* ஒருவேளை உங்கள் கார் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், வெவ்வேறு வங்கிகளில் தொடர்ந்து விண்ணப்பிக்க முயற்சி எடுக்க வேண்டாம். ஏனென்றால் ஏற்கனவே உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் நிராகரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.


* கார் கடனுக்காக டீலர்களை சார்ந்திருக்க வேண்டாம். ஏனென்றால் பொதுவாக டீலர்கள் வழங்கும் கடன் சிறந்த வட்டி விகிதத்தை கொண்டிருக்காது.


* கடனில் கார் வாங்கும் நிலையில் ஏற்கனவே நீங்கள் EMI மற்றும் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டணங்களை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். இந்த சூழலில் அதிக சர்வீஸ் செலவை (high service cost) கொண்ட காரை தேர்வு செய்வது புத்திசாலித்தனம் இல்லை என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.







Post Top Ad