மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அஞ்சல் துறையின் புதிய சேவை! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, November 7, 2021

மத்திய, மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அஞ்சல் துறையின் புதிய சேவை!

 



ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் அளிக்கும் சேவையை அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.


உயிர்வாழ் சான்றிதழ்


தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள் அந்தந்த மாவட்ட ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளிடம் மாதந்தோறும் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா முதல் அலையின் போது ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி உயிர் வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்று அதிகம் பாதிக்க கூடிய வயதினராக ஓய்வூதியதாரர்கள் இருப்பதால் அவர்களுக்கு தொற்று மிக எளிதாக பரவ வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் கால அவகாசம் வழங்கப்பட்டது. அரசின் சேவை மையங்கள், வங்கிகள் ஆகியவற்றின் மூலம் மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வழங்கப்படுகிறது.



நேரில் சென்று சான்றிதழ் பெறுவதில் ஓய்வூதியதார்ர்கள் தொடர்ந்து சிக்கலை எதிர்கொள்கிறார்கள். மேலும் வயதானவர்கள் தொற்று பரவும் காலத்தில் வெளியில் சென்று வருவதால் அச்சத்திலும் உள்ளனர். இந்த நிலையில் ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே சென்று மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் அளிக்கும் சேவையை அஞ்சல் துறை தொடங்கி உள்ளது. அஞ்சல் ஊழியர்கள், கிராமப்புற அஞ்சல் சேவகர்கள் மூலம் குறைந்த கட்டணத்துடன் ஓய்வூதியர்களின் வீடுகளுக்கே சென்று உயிர்வாழ் சான்றிதழ் வழங்கப்படும்.




Post Top Ad