தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ?அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் - Asiriyar.Net

Post Top Ad


Thursday, October 15, 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ?அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

 


ஆந்திராவில் பள்ளிகள் திறந்ததால் மாணவர்களுக்கு கொரோனா பரவி உயிரிழப்பும் ஏற்பட்டது. எனவே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது. கொரோனா தாக்கம் குறைந்த பின் தான் முடிவெடுக்க முடியும்'' என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.மேலும் அவர் கூறியதாவது:''அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டம் இயற்றி அதை இந்தாண்டே செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்வி தொலைக்காட்சியில் 60 சதவீத பாடங்கள் மட்டும் நடத்தப்படுகிறது. எனவே தேர்வில் 60 சதவீத பாடத்திலிருந்து மட்டும்தான் கேள்விகள் கேட்கப்படும்'' என்றார்.

Recommend For You

Post Top Ad