ஆசிரியர் பள்ளிக்கு வர வேண்டும் - மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை - CEO Proceedings - Asiriyar.Net

Post Top Ad


Sunday, March 15, 2020

ஆசிரியர் பள்ளிக்கு வர வேண்டும் - மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை - CEO Proceedings
கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையின் பொருட்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்துமாறு திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .


1 . திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளில் பயிலும் Pre - KG ( LKG , UKG ) 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 16 . 03 . 2020 முதல் 31 . 03 . 2020 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .


2 . ஆனால் , ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிந்து மாணவர்களுக்கு கல்வ பணிகள் மேற்கொள்ளுதல் , கல்வி கட்டகங்கள் தயாரித்தல் , மற்று அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் . 

3. ஏற்கனவே , கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின்படி , தினமும் பள்ளி வழிபாட்டுக் ( PRAYER ) கூட்டத்தில் விழிப்புணர்வு செய்திகளை தெரிவிக்க வேண்டும் .

4 . தினமும் , வகுப்புக்குள் மாணவர்கள் நுழைவதற்கு முன் கைகளை சோப்பினால் கழுவிவிட்டு அனுமதிக்கப்பட வேண்டும் .

5 . மேற்கண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளை போட்டோவுடன் உடன் முதன்மைக் கல்வி அலுவலக மின்ன ஞ்சல் ( ceodg | 2017 @ gmail . com ) முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
Recommend For You

Post Top Ad