அரசு பள்ளிகளில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு வெகுமதி - Asiriyar.Net

Post Top Ad


Thursday, February 20, 2020

அரசு பள்ளிகளில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு வெகுமதி

அரசு பள்ளிகளில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு வெகுமதி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்ட உத்தரவை தலைமை ஆசிரியர்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ளனர். அதில் 25 ஆண்டுகள் எந்த குற்றச்சாட்டுக்கும் இடமளிக்காமல் மாசற்ற முறையில் பணிபுரிந்த ஆசிரியர்- ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்களின் விவரங்களை 21ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் தலா 2000 ரூபாய் வெகுமதியும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommend For You

Post Top Ad