TVK முழு தேர்தல் அறிக்கை - முக்கிய அம்சங்கள், கல்வி & அரசு ஊழியர் நலன் - Asiriyar.Net

Monday, May 4, 2026

TVK முழு தேர்தல் அறிக்கை - முக்கிய அம்சங்கள், கல்வி & அரசு ஊழியர் நலன்





நிகழ்ச்சியில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான த.வெ.க-வின் முழு தேர்தல் அறிக்கை


திருக்குறளை அடிப்படையாக கொண்டு

த.வெ.க. தேர்தல் அறிக்கை திருக்குறளில் உள்ள அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டதாக விஜய் குறிப்பிட்டார்.


  • 60 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு மட்டும் இந்த தொகை அளிக்கப்படாது.
  • அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின்கீழ் 6 விலையில்லாத சிலிண்டர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுதோறும் அளிக்கப்படும்.
  • திருமணம் செய்யும் ஏழைப் பெண்களுக்கு 1 சவரன் தங்கம், தரமான பட்டுச் சேலை
  • தமிழகம் முழுவதும் அனைத்துப் பெண்களும் எங்கிருந்து வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயணிக்க அனைத்துப் பேருந்துகளிலும் இலவசப் பேருந்து வசதி
  • அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர், பாதுகாவலர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம்
  • வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வரை உதவித்தொகை,
  • 12, ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.2,500 மாதாந்திர உதவித்தொகை
  • தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கு ரூ.25 லட்சம் பிணையில்லாக் கடனுக்கான உத்தரவாதம்

கல்விக்கான உத்தரவாதம்

  • 100 காமராசர் சிறப்புப் பள்ளிகள்
  • அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தரமான கல்வியை வழங்கும் உறைவிடப் பள்ளிகள்
  • ஒவ்வொரு மாணவரின் கல்விக்கும் உத்தரவாதம் அளிக்கும் வகையில், இளங்கலை முதல் பிஎச்.டி வரை ரூ.20 லட்சம் பிணையில்லாக் கல்விக் கடனுக்கான உத்தரவாதம்
  • ஏஐ மூலம் இலவச போட்டித்தேர்வு பயிற்சி


தவெக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

1.மகளிர் மேம்பாடு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500, 6 விலையில்லா சிலிண்டர்கள், மணப்பெண்களுக்கு 1 சவரன் தங்கம் பட்டுச்சேலை, பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், மாணவர்களின், மகளிர் குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வட்டியில்லா கடன்.

2. உலகத்தரக் கல்வி
உறைவிட வசதியுடன் 100 காமராஜர் சிறப்புப் பள்ளிகள், ரூ.20 லட்சம் வரை உயர்கல்விக் கடன், நவீன கட்டமைப்புடன் அரசுப் பள்ளிகள், ஏஐ மூலம் கட்டணமில்லா போட்டித் தேர்வு பயிற்சிகள்.

3.சுகாதாரமான தமிழ்நாடு
குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு, நவீன கட்டமைப்புடன் கூடிய மருத்துவமனை, ஆண்டுதோறும் கட்டணமில்லா முழு உடல் பரிசோதனை,

4. போதைப்பொருள்

போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு

5. சமூகப் பாதுகாப்பு
முதியோர், கைம்பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம், 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு. நீண்டகாலம் பட்டா இல்லாதவர்களுக்குப் பட்டா.

6. அரசு ஊழியர் நலன்
மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனை, ஐந்தாண்டு பணியிலுள்ள ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம், அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.18,000, சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதியம், பணி ஓய்வின் போது ரூ.15 லட்சம்

7. இளைஞர் முன்னேற்றம்
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வரை உதவித்தொகை, ஊதியத்துடன் கூடிய 5 லட்சம் இன்டர்ன்ஷிப், 5 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள், தொழில் தொடங்க ரூ. 25 லட்சம் கடன், அரசுத் தேர்வுகளுக்குக் கால அட்டவணை.

8. விவசாயிகள் நலன்
நிலமுடைய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 முதலீட்டு உதவி, பயிர்க் கடன்கள் தள்ளுபடி, MSP: நெல் குவிண்டால் ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.4,500, 5 லட்சம் சோலார் பம்புகள், தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000; 100% பயிர்க் காப்பீடு.

9. மீனவர் நலன்
தடைக்கால நிவாரணம் ரூ.27,000, மீன்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, ரூ.25 லட்சம் விபத்துக் காப்பீடு, மீனவர்களுக்கு நிரந்தர வீடு.

10. தமிழ்நாடு வளர்ச்சி
2036-க்குள் ரூ.15 டிரில்லியன் பொருளாதாரம், ஏஐ அமைச்சகம், ஏஐ பல்கலைக்கழகம், ஏஐநகரம், MSME-களுக்கு ரூ.15,000 கோடி ஆதரவு, மாவட்ட வாரியாக ’மாஸ்டர் பிளான்’: தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு 21 நாட்களுக்குள் வணிக உரிமம்.

11. நல்லாட்சி
லஞ்சமில்லா நிர்வாகத்துடன் அரசுச் சேவைகள் அனைத்தும் வீட்டு வாசலில், காலக்கெடுவுடன் கூடிய அரசு சேவைகள், நிதி ஒதுக்கீட்டில் 10% திட்டங்களை மக்களே தீர்மானிக்கும் அதிகாரம். சட்டமன்றத்தில் மக்கள் முறையீட்டுக்காக ஒருநாள்.












No comments:

Post a Comment

Post Top Ad