அரசு பள்ளிகளில் ஆண்டு விழா - ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு விளக்கம் - Asiriyar.Net

Friday, July 5, 2024

அரசு பள்ளிகளில் ஆண்டு விழா - ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு விளக்கம்

 அரசு பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் கொண்டாட போதிய நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது. 


நடப்பாண்டு ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களுக்கு வழங்கப்படும் நிதியை உயர்த்தி வழங்க உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார். 


தனியார் பள்ளிகளை போல ஆண்டு விழாக்களை நடத்துவது சாத்தியமற்றது எனவும் வரும் காலங்களில் பள்ளி ஆண்டு விழாவுக்கான நிதியை உயர்த்துவது குறித்து அரசே முடிவெடுக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Post Top Ad