Income Tax Returns Filing - வருமானவரி கணக்குத்தாக்கல் செய்வோர் கவனத்திற்கு - Asiriyar.Net

Friday, July 19, 2024

Income Tax Returns Filing - வருமானவரி கணக்குத்தாக்கல் செய்வோர் கவனத்திற்கு

 



அனைவருக்கும் TDS செய்யப்பட்டு படிவம் 16 அளிக்கப்பட்டு இருக்கும்.வருமானவரி தனிநபர் கணக்கு (E-Filing)தாக்கல் செய்திட ஜூலை 31 இறுதி நாள் ஆகும்.ஜூலை 31 தேதிக்கு முன்னதாக E-Filing செய்திடுவீர்.


*E-Filing செய்யும் போது 2023-2024 நிதியாண்டில் வருமானவரி பழைய முறையினை தேர்வு செய்தவர்கள் மட்டும் வங்கிக்கணக்கு வட்டி TTA கலத்தில் 10000 ரூபாய் வரை கழிக்க இயலும்.வருமானவரி புதிய முறையினை தேர்வு செய்தவர்கள் இவ்வாண்டு நிலையான வரிக்கழிவு ரூ 50000 தவிர வேறு எதையும் கழிக்க இயலாது.


*;மேலும் இவ்வாண்டு SB வங்கிக் கணக்கு வட்டி என்ற பெயரில் காட்டப்பட்ட தொகை TTA கலத்தில் கழிக்க இயலாததால் அதற்காக வரியினை கட்டாயமாக கட்டவேண்டும்.


*வங்கி வைப்புக்கான(Deposit) வட்டி புதிய வருமானவரி வகையில் கட்டாயமாக வரிபிடித்தம் செய்ய வேண்டும்.


*வருமானவரி கட்ட வேண்டிய நேர்வுகளில் சமதவணைகளாக கணக்கீடு செய்து கட்டவேண்டும்.ஆனால் சென்ற நிதியாண்டு (2023-2024)வரை கடைசி 2 மாதங்களில் அதிகமான வருமானவரித் தொகையினை கட்டுபவர்கள் பெரும்பாலானோர் இருந்தனர்.அதனால் வருமானவரித்துறையால் அபராத வட்டி கணக்கீடு செய்யப்பட்டது.அதற்கான வருமானவரித்தொகையினை கட்டியே ஆகவேண்டும்.


*இவ்வாண்டு முதல் (2024-25 நிதியாண்டு)12 மாதங்களுக்கு சமதவணைகளில் வருமானவரி பிடித்தம் செய்வதால் அபராத வட்டி என்ற பெயரில் புதிய கணக்கீடு நமது ஆசிரியர்களுக்கு வரும் வாய்ப்பு இல்லை.


*வருமானவரி பழைய முறையில் கணக்கீடு செய்தவர்களுக்கு பழைய முறையில் TTA உள்ளிட்ட எந்தெந்த இனங்களில் சென்ற ஆண்டு கழித்தோமே அவ்வாறே கழித்துக் கொள்ளலாம்.


* சென்ற நிதியாண்டு 2023-2024 புதிய முறையில் வருமான வரி செலுத்தியவர்கள் வங்கியில் உள்ள வட்டிக்கும் வரி கட்ட வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது என்பதை மீண்டும் பதிவு செய்கிறோம்.


* எந்த விதத்திலும் அட்ஜஸ்ட் செய்ய இயலாது எனவே வருமான வரி கூடுதலாக வந்திருந்தால் கட்டி முடித்துவிட்டு உடனடியாக E Filing செய்ய வேண்டும்


 கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கவும்.


No comments:

Post a Comment

Post Top Ad