அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு? - Asiriyar.Net

Sunday, July 28, 2024

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்ப பள்ளிக் கல்வித்துறை முடிவு?

 




தமிழக அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை முன்வைத்து வருகின்றனர். 


குறிப்பாக பதவி உயர்விற்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி சொல்ல வேண்டும். இவர்களுக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளிப்பதன் மூலம் இரண்டு விஷயங்களை பூர்த்தி செய்யலாம். ஒன்று, ஓய்வு பெறுவதற்கு முன்பாக பதவி உயர்வு வாய்ப்பு வழங்குவது.


இரண்டு, காலிப் பணியிடங்களால் ஆசிரியர்களுக்கு ஏற்படும் கூடுதல் சுமையை குறைப்பது. கடந்த கல்வியாண்டு வரை மாநிலம் முழுவதும் பல்வேறு அரசு பள்ளிகளில் 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களை நிரப்ப முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் நீதிமன்ற வழக்குகள்.


டெட் தேர்வு சர்ச்சை


அதாவது, 2011ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டெட் எனப்படும் தகுதித்தேர்வு தான் பெரிய சிக்கலாக வந்து நிற்கிறது. ஆசிரியராக பணியில் சேர்வதற்கு மட்டுமே டெட் தேர்வு கட்டாய என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற வழக்கு ஒன்றில் பதவி உயர்விற்கும் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


நீதிமன்றத்தில் வழக்கு


இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். பதவி உயர்விற்கு டெட் தேர்வு அவசியம் என்பதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருவதால் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.


ஆசிரியர்கள் பணி ஓய்வு


இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், சில ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் தான் இருக்கின்றன. அதற்குள் பதவி உயர்வு கிடைத்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 25 அல்லது 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காமல் போனால் அது குறையாகவே இருந்து விடும்.


பள்ளிக் கல்வித்துறை உத்தரவு


இந்த சூழலில் மாநிலம் முழுவதும் 345 மூத்த ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மூன்றில் ஒருபங்கு காலியிடங்களை நிரப்பி விட்டுள்ளது. இதேபோல் எஞ்சிய பணியிடங்களுக்கு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad