இடமாறுதல் பெற்றாலும், பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை இருந்தால், பணியில் இருந்து விடுவிக்க வேண்டாம்' என, மாவட்ட அதிகாரி களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு, இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றும் பள்ளிகளில் இருந்து, தங்களுக்கு விருப்பமான வேறு பகுதிகளின் பள்ளிகளுக்கு, இடமாறுதல் பெற்று செல்கின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்ட விதிகளின்படி, இந்த கவுன்சிலிங் நடத்தப்படு கிறது. இந்நிலையில், இட மாறுதல் பெறும் ஆசிரியர் கள், உடனடியாக தங்களுக் கான புதிய பள்ளிகளில் பணியில் சேர்கின்றனர்.
இதனால், பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படுவதுடன், சில பள்ளிகளில் ஒட்டுமொத்த ஆசிரியர்களும், பிற பள்ளிகளுக்கு மாறி விடுகின்றனர்.
இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் எந்தவொரு ஆசிரியரோ, தலைமை ஆசிரியரோ இல்லாத நிலை ஏற்பட்டு, மாணவர்களும், பெற்றோரும் போராட்டம் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இடமாறுதலால் ஏற்படும் இந்த பிரச்னைகளை தீர்க்க, முதல் கட்டமாக, ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
இதன்படி, ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றாலும், அவர்கள் பணியாற்றும் பள்ளிகளில் உரிய ஆசிரியர்கள் உள்ளனரா என்றும், எந்தவொரு ஆசிரியரும் இல்லாத நிலை ஏற்படுகிறதா என்றும் ஆய்வு செய்த பிறகு, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment