தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோஜாக்)* *மாநில உயர்மட்டக் குழு*
*நாள்:22.07.2024*
***********************
*டிட்டோஜாக்கின் டிபிஐ தொடர் முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்!*
*டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு அறிவிப்பு*
***********************
*இன்று(22.07.2024) தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (டிட்டோஜாக்) மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் செனனை தலைமைச் செயலகத்தில் மதிப்புமிகு.பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர்,
சென்னையில் தலைமைச்செயலக சங்க அலுவலகத்தில் நடைபெற்ற டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் "31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 2024 ஜூலை 29,30,31 ஆகிய தேதிகளில் டிட்டோஜாக் சார்பில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சென்னை டிபிஐ தொடர் முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது" என்ற விவரம் டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது*
***********************
*இப்படிக்கு*
*ச.மயில்*
*சுழல் முறைத் தலைவர்*
*டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு*
No comments:
Post a Comment