சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பின் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்க வேண்டும் மற்றும் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டிற்குள் கீழ் கண்டுள்ள அரசு விதிகளின் படி 2024-25 ஆம் நிதியாண்டிற்கு தகுதியுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நாளிலிருந்து மூன்று ஆண்டிற்குள் விண்ணப்பிக்கும் அப்பெண் குழந்தைகளுக்கு தலா ரூபாய் 25000/-க்கான வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்படும். தாயின் வயது மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வயது வரம்பு விண்ணப்ப நாளன்று 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் 40 வயதிற்குள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000-க்குள் மிகாமல் இருக்க வேண்டும். ஆண் வாரிசு இல்லை என்ற சான்று அதற்கென வட்டாட்சியரிடம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு பெண் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள்/ ஒருவேளை இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு முதல் குழந்தையோ அல்லது இரண்டாவது குழந்தையோ இறந்திருப்பின் அவர்களின் இறப்பு சான்று இணைக்க வேண்டும்.
தாய் மற்றும் தந்தையின் வயது சான்று (பள்ளி மாற்று சான்றிதழ் அல்லது அரசு மருத்துவரிடமிருந்து பெற்ற சான்று), இருப்பிட சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ், மருத்துவரிடமிருந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்கான சான்றிதழ் (தாய் அல்லது தந்தை), ஒரு வேளை ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பிக்கலாம்.
முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து, இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பிக்கும் அப்பெண் குழந்தைகளுக்கு தலா ரூபாய் 25000/-க்கான வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்படும். முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் இத்திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பிக்கும் அப்பெண் குழந்தைக்கு ரூபாய்.50000/-க்கான வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்
வருமானச் சான்றிதழ்
இருப்பிட சான்றிதழ்
சமூகத்தின் சான்றிதழ்
குடும்ப அட்டை (ரேஷன் கார்டு)
ஆதார் அட்டை
திருமண சான்றிதழ்
ஆண் குழந்தை இல்லை என்று சான்றிதழ் தாசில்தாரிடம் வாங்க வேண்டும்
கருத்தடை சான்றிதழ்
பெற்றோர் வயது சான்றிதழ் (பிறப்புச் சான்று அல்லது கல்வித்துறை மாற்றுச் சான்றிதழ் )
குடும்பத்தின் புகைப்படம்
முக்கிய விதிமுறைகள்
இந்தத் திட்டத்தில் பயனாளியாக இருக்க வேண்டுமென்றால் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 72000-குள் குறைவாக இருத்தல் வேண்டும் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் மற்றும் ஆண் குழந்தை இருக்கக் கூடாது மேலும் தாய்மார்கள் அவர்களின் பிரசவ காலம் முடிந்து தனது முதல் குழந்தை மூன்று வயதுக்குள் இந்தத் திட்டத்தில் சேர்த்து விட வேண்டும் ...
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் எங்கே விண்ணப்பிக்க வேண்டும் ?
இந்தத் திட்டத்தில் நீங்கள் அப்ளை செய்ய வேண்டுமென்றால் நீங்கள் வசித்து வரும் வட்டாரத்தில் உள்ள ( BLOCK DEVELOPMENT OFFICE ) BDO அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
BDO அலுவலகத்திற்கு சென்று பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு அப்ளை செய்ய வேண்டும் என்று கூறினால் அந்தத் திட்டத்தின் விண்ணப்ப படிவத்தை தங்களுக்கு வழங்குவார்கள் அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவர்களிடம் கொடுக்க வேண்டும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய அதாவது ஆவணங்களை தயார் செய்ய கால அவகாசம் கொடுக்கப்படும் கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து BDO அலுவலகத்தில் விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும்...
அதன் பிறகு BDO அலுவலகத்தில் தங்களது ஆவணங்களை சரிபார்த்து அப்ளை செய்வார்கள் ஆவணத்தை ஸ்கேன் செய்த பின் தங்களிடம் ஒரிஜினல் ஆவணத்தை கொடுத்து விடுவார்கள். அதற்குப் பிறகு இரண்டு மாதம் கழித்து தாங்கள் இந்த திட்டத்தில் தகுதியானவர்கள் என்றால் தங்கள் பெண் குழந்தைக்கு டெபாசிட் செய்யப்பட்ட சான்றிதழ் அதாவது DOCUMENT காப்பியை தங்களிடம் கொடுப்பார்கள் அந்த DOCUMENT காப்பியை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்...
குழந்தை மைனர் என்பதால் குழந்தையின் அம்மா மற்றும் குழந்தை பெயரில் ஜாயிண்ட் அக்கவுண்டாக தொடங்கப்பட்டு பணத்தை அதில் டெபாசிட் செய்வார்கள்
டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் பராமரித்து வருவார்கள் மேலும் இந்தத் திட்டத்தில் BDO அலுவலகத்தில் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை Renewal செய்ய வேண்டும்.
Renewal செய்ய DOCUMENT காப்பி கட்டாயம் இருக்க வேண்டும் அதனால் DOCUMENT காப்பியை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்...
அதன் பிறகு பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தி அடைந்த பின் அவரவரின் திட்டத்தின் படி பணம் வந்து சேரும் அதனை BDO அலுவலகத்தின் உறுதியின் மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்...
No comments:
Post a Comment