1.1.2021 நிலவரப்படி ஆன அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணி மாறுதல் காண பெயர் பட்டியல் வெளியீடு!
உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் சார்பாக சேர்க்கை, நீக்கம், திருத்தம் கோரி உத்தரவு
01.01.2021 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு | பணி மாறுதலுக்குத் தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியல் பார்வை 1-இல் காணும் செயல்முறைகளின்படி பெறப்பட்டுள்ளது. இதில் 1 முதல் 486 நபர்கள் கொண்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியலில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 23 ஆசிரியர்களின் விவரங்களில் ஏதேனும் சேர்க்கை | நீக்கம் மற்றும் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களுடன் 2 நகல்களில் 14.122021அன்று காலை 11.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் உள்ளவர்கள் சார்ந்த விவரங்களை நீக்கம் செய்வது மற்றும் விடுபட்டவர்களை சேர்ப்பது, பெயர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்கள் கீழ்நிலைப் பதவியிலிருந்து பதவி உயர்வு மூலம் நியமனம் பெற்றவர்களா என்பதனையும் மிக கவனமாக சரிபார்த்தும், அலகு விட்டு அலகு மாறுதல் மூலம் பள்ளிக் கல்வித்துறைக்கு ஈர்த்த்துக்கொள்ளப்பட்டவர்களின் பணிவரன்முறை நாளினையும் சரிபார்த்து சார்ந்த ஆசிரியர்களின் கையொப்பத்துடன் சமர்பிக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Click Here To Download - High School HM Panel - pdf
No comments:
Post a Comment