தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு டிசம்பர் மாதம் ஊதியம் நிறுத்தி வைக்கப்படும் - மின்வாரியத்தின் அறிவிப்பால் பரபரப்பு - Asiriyar.Net

Thursday, December 2, 2021

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு டிசம்பர் மாதம் ஊதியம் நிறுத்தி வைக்கப்படும் - மின்வாரியத்தின் அறிவிப்பால் பரபரப்பு

 




மதுரை மண்டல மின்பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று மதுரை மண்டல பொறியாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அலுவலர், பணியாளர்களுக்கு டிசம்பர் மாதம் ஊதியம் நிறுத்தி வைக்கப்படும் என்று தகவல் வெளியானது.


இந்த முடிவினை கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தின் மூலமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் மதுரை மண்டல மின்பகிர்மான தலைமை பொறியாளர் உமாதேவி உறுதி செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாத பட்சத்தில் அவர்களுக்கு உடல் பாதிப்பு ஏதேனும் இருந்தால் அதுகுறித்த சான்றிதழை முறையாக சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்தால் அவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது. அவ்வாறு சான்றிதழ் சமர்பிக்காத நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு டிசம்பர் மாதம் ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என தகவல் வெளியானது.


இந்நிலையில் தடுப்பூசி போடாத மின்ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது என்று மதுரை மண்டல தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார். ஊதியம் பிடிக்கப்படும் என்று சுற்றறிக்கை வெளியான நிலையில் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad