இந்தியாவிலும் பரவியது ஒமைக்ரான் வைரஸ், கர்நாடகாவில் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்ற பிரிவான ஒமைக்ரான் வைரஸ் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. முதலில் 4 அல்லது 5 மண்டலங்களில் காணப்பட்ட ஒமைக்ரான் தற்போது 23 நாடுகளுக்கு பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
ஒமைக்ரானின் இந்த வளர்ச்சியை உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து மிகத்தீவிரமாக ஒவ்வொரு நாட்டையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. ஆனால், ஒமைக்ரானின் இந்த வளர்ச்சி எங்களுக்கு வியப்பாக இல்லை. வைரஸ்கள் என்ன செய்யுமோ அதைத்தான் செய்கிறது. இந்த வைரஸ் தொடர்ந்து பரவிக்கொண்டேதான் இருக்கும்.
No comments:
Post a Comment