அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்காதீர் - தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.
பள்ளிக்கல்வித்துறையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மாணவர்களை வர வைக்க வேண்டாம் என தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்பு நடத்த கடந்த 20ஆம் தேதியே வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன
இதன்படி தமிழகத்தில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது பெற்றோர் அனுமதியுடன் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க அனுமதி கடிதம் வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது மாவட்ட வாரியாக அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது இந்நிலையில் நேற்று நடக்கவிருந்த காணொளி ஆய்வுக் கூட்டம் வரும் ஒன்பதாம் தேதி மாற்றப்பட்டுள்ளது
இதோடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என தலைமையாசிரியர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் பள்ளி திறப்பில் உள்ள நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வுகாண அடிப்படை வசதிகளை மேம்படுத்த பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment