வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் மேலும் 2 மாதம் நீட்டிப்பு: வருமான வரித்துறை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, October 1, 2020

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் மேலும் 2 மாதம் நீட்டிப்பு: வருமான வரித்துறை

 



வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் மேலும் 2 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் குறைந்து, பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்ட வருமான வரித்துறையினர், 2019-2020 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது. 




வருமான வரித்துறை அளித்த அவகாசம் இன்றுடன் முடியவுள்ள நிலையில், மேலும் 2 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ‘‘ கொரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு 2019-2020 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் நவம்பர் 30-ந்தேதி வரை வழங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Post Top Ad