மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகளை கணக்கிடும் பணிகள்: அரசிதழில் வெளியீடு - Asiriyar.Net

Thursday, March 12, 2020

மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகளை கணக்கிடும் பணிகள்: அரசிதழில் வெளியீடு






மக்கள் தொகை கணக்கெடுப்பில் வீடுகளை கணக்கிடும் பணிக்கான விவரங்கள் தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ள நிலையில், முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும் பணிகள் குறித்த விவரங்கள் தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும், வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுகிறது.



தமிழகத்தில் ஜுன் மாதம் தொடங்கி ஜூலை மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.



இதுவரை காகிதங்களைக் கையாண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்புப் பணிகள், முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செல்போன் செயலி மூலமாக நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





Post Top Ad