பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 05.02.2020
திருக்குறள்
அதிகாரம்:ஊழ்
திருக்குறள்:372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.
விளக்கம்:
அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.
பழமொழி
As is the king, so are subjects
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
இரண்டொழுக்க பண்புகள்
1. தேசத் தந்தை மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கர் மற்றும் காமராஜர் போன்ற தன்னலமற்ற பெருந்தலைவர்கள் போல ஆக முயற்சிப்பேன்.
2. அதையே என் வாழ்நாளின் இலட்சியமாக கொள்வேன்.
பொன்மொழி
நமக்கான எல்லைகளை நாம் தான் அளவிட்டு வகுக்கவேண்டும். அடுத்தவரின் அளவீடுகள் நமக்கு எப்போதும் பொருத்தமாகாது. ..
பொது அறிவு
1. கால்பந்துக்கான உலகக் கோப்பைக்கு என்ன பெயர்?
ஜூல்ஸ் ரிமெட் கோப்பை
2. 1896ல் நடந்த முதல் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றவர் யார்?
ஜேம்ஸ் கானோலி
English words & meanings
Immunology – study of immunity. நோயெதிர்ப்பு தன்மை குறித்து படிக்கும் அறிவியல் பிரிவு.
Igneous - rocks formed by volcanoes. எரிமலை மூலம் உருவாக்கப்பட்ட பாறைகள்
ஆரோக்ய வாழ்வு
கொய்யாப்பழம் அதிகம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய்க்கான அபாயம் குறைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொய்யாப்பழத்தில் லைகோபீனே நிறைந்துள்ளதால் இது மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கிறது.
Some important abbreviations for students
est. - estimate.
excl. - excluding
நீதிக்கதை
கோபத்தை மறந்த ராமு
குறள் :
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
விளக்கம் :
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும். ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
கதை :
ஒரு ஊரில் ராமு என்பவன் இருந்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்.
ராமுவும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான். மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்திவிட்டான். அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமைப் பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.
ராமுவும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான். நண்பனே நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன.
ஆனால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார். இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன.
அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உண்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உண்டாக்கும் வடுவிற்கும், செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்றான் ராமுவின் நண்பன்.
நீதி :
எக்காரணத்தினாலும் தீய சொற்களை பயன்படுத்தக் கூடாது.
இன்றைய செய்திகள்
05.02.20
★நடப்பு ஆண்டில் நடைபெறுவதாக இருந்த 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
★மத்திய அரசு அறிவித்துள்ள எல்ஐசி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் அந்நிறுவன ஊழியர்கள் ஒரு மணி நேரம் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்.
★இந்தியாவை பொறுத்தவரை, கேரளாவில் 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
★சொ்பியாவின் போராஸ் நகரில் நடைபெற்ற கோல்டன் கோ்ள் ஜூனியா் குத்துச்சண்டைசாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 6 தங்கம் உள்பட 14 பதக்கங்களையும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
Today's Headlines
🌸 School Education Minister declared that the public exams which is to be held on this current year has been cancelled.
🌸 The LIC employees of Madurai were conducted one hour boy cot protest after the announcement of sale of shares.
🌸 As far as India is concerned, 3 people in Kerala have been diagnosed with coronavirus. In this case, Kerala Chief Minister Pinarayi Vijayan has declared the corona virus as a state disaster.
🌸India won 14 medals, including 6 gold, at the Golden Globe Junior Boxing Championship in Boras, Sofia.
🌸 For the World Cup Cricket under 19 the current Cricket Champion India is playing against Pakistan in the semi finals.
Prepared by
Covai women ICT_போதிமரம்