இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: தொடக்க பள்ளிகளில், கல்வித் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்கள், &'ஓபி&' அடிக்காமல் பாடம் கற்பிக்க, தொழில்நுட்ப ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து தொடக்க பள்ளிகளிலும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., உள்ளிட்ட வகுப்புகளை துவக்க வேண்டும். பொருளாதாரத்தில் நலிந்த குடும்பத்தினரின் குழந்தைகள், துவக்கம் முதல், தமிழ் கட்டாய பாடத்துடன் கூடிய, ஆங்கில வழி வகுப்புகளை பயில ஏற்பாடு செய்ய வேண்டும்.அங்கீகாரம் இல்லாத நர்சரி, பிரைமரி, மழலையர் பள்ளிகளை மூட வேண்டும். கார்ப்பரேட் தலையீடு?அங்கீகாரம் பெறும் நடைமுறைகளை எளிதாகவும், இடைத்தரகர்கள் இல்லாமலும், எளிமையாக மாற்ற வேண்டும்.
அரசு பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், ஆங்கில வழி கல்வி முறையை அமல்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளின் நிர்வாகத்தில், தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவன பிரதிநிதிகள் தலையீட்டை தடுக்க வேண்டும். பள்ளி கல்வி இயக்குனர்கள், இணை இயக்குனர்களின் கருத்துகளை கேட்டு, முடிவு எடுக்க வேண்டும்.மாவட்டங்களில் குறுநில மன்னர்கள் போல் செயல்படும், முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் தொடக்க கல்வி அதிகாரிகளின் அதிகாரங்களை குறைத்து, அவர்களுக்கு, &'அகாடமிக்&' என்ற, கல்வி சீர்திருத்த பணிகளை அதிகரிக்க வேண்டும். புதிய பாடத்திட்ட புத்தகங்களுக்கு, சரியான பயிற்சி புத்தகம் தயார் செய்ய வேண்டும்.