வரி நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், தனிநபர் வருமான வரி குறைக்கப்பட்டிருப்பதாலும், மத்திய அரசு தற்போது வழங்கப்பட்டு வரும் 100க்கும் மேலான வரி விலக்கு அம்சங்களைக் குறைக்க திட்டமிட்டு இருக்கின்றது. அதன்படி 70க்கும் மேலான அம்சங்கள் நீக்கப்படுகின்றது. புது வருமான வரி விதிப்பில் கீழ்கண்ட வரி விலக்கு அம்சங்கள் இருக்காது.
நான்காண்டுகளில் மட்டும் இருமுறை அனுமதிக்கப்படுகின்ற விடுமுறைக்கான பயண படிக்கான வரி விலக்கு நீக்கப்பட இருக்கின்றது.
வாடகைக்கு இருக்கின்ற சம்பளதாரர்கள் யாவரும் மாதாந்திர வாடகைக்கு வரி விலக்கு கோரலாம் என்கின்ற தற்போதைய நடைமுறை நீக்கப்படுகின்றது.
வீட்டுலோனில் வாங்கிய வீட்டில் குடியிருபிப்ரோருக்கு கடனுக்கான வட்டிக்கு வரி விலக்கு கோரப்பட்டு வந்தது இனி நீக்கப்படுகின்றது.
நிரந்தர கழிவாக இருக்கின்ற ரூ.50 ஆயிரம் நீக்கப்படுகின்றது.
குடும்ப பென்ஷனுக்காக குறைக்கப்படுகின்ற ரூ.15 ஆயிரத்துக்கு இனி வரி விலக்கு கிடையாது.
குழந்தைகளின் கல்விக் கட்டணம், 80சியில் வழங்கப்படும் இன்ஷூரன்ஸ் பிரீமியம், மற்றும் முதலீடுகளான இஎல்எஸ்எஸ், பிபிஎஃப் என்பிஎஸ், போன்றவற்றுக்கான வரிவிலக்கும் இனி இருக்காது.
80டியில் வழங்கப்படுகின்ற மருத்துவ காப்பீடுக்கான விலக்கும் கிடையாது.
80டிடிபி, 80டிடி ஆகிய பிரிவுகளின் கீழ் பெறப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிவிலக்கும் ரத்து செய்யப்படுகின்றது.
கல்விக்கடன் வட்டிக்கான வரிவிலக்கும் நீக்கப்படுகின்றது.
80ஜி பிரிவில் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கான வரிவிலக்கும் நீக்கம் செய்யப்படுகிறது. புதிய வருமான வரி நடைமுறையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு இந்த வரிவிலக்கு ஏதும் இருக்காது. இந்த வரி விலக்குகளை பெற விரும்புவோர் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி நடைமுறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.