Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Saturday, May 11, 2019

பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்க ஏற்பாடு





பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்குவதற்காக, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு புத்தகங்களை அனுப்பும் பணியில் பள்ளிக்கல்வித் துறை ஈடுபட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. கடந்த ஆண்டு 1, 6 ,9 ,11 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மீதமுள்ள வகுப்புகளுக்கும் புதிய பாடதிட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

இதற்காக புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்த புத்தகங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
LightBlog