டெட் தேர்வு நுழைவுச்சீட்டு: தரவிறக்கம் செய்ய வழிமுறைகள் வெளியீடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Friday, May 31, 2019

டெட் தேர்வு நுழைவுச்சீட்டு: தரவிறக்கம் செய்ய வழிமுறைகள் வெளியீடு


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை தரவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதை தரவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.


இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்- 1 மற்றும் தாள்- 2 ஆகியவற்றுக்கான தேர்வுகள் வரும் ஜூன் 8, 9 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளன.


இந்தத் தகுதித்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யும் வகையில் கடந்த மே 26-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது

சில தேர்வர்கள் பயனியர் குறியீடு, கடவுச்சொல் ஆகியவற்றை மறந்துவிட்டதால் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய இயலாத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய உரிய வழிமுறைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளன.


 இந்த முறையினை பயன்படுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.Post Top Ad