அரசுப் பள்ளிகளை 3ம் தேதி திறக்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு - Asiriyar.Net

Thursday, May 30, 2019

அரசுப் பள்ளிகளை 3ம் தேதி திறக்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு

அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 3ம் தேதியே திறக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை காலம் ஜூன் 2ம் தேதி முடிகிறது. இதையடுத்து 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் 3ம் தேதியே திறக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார். 

அதில் கூறப்பட்டுள்ளதாவது:


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் 3ம் தேதி திறக்க வேண்டும். அப்போது, பள்ளி வளாகங்கள் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக பள்ளிக்கு வந்து வளாகம் மற்றும் பள்ளி வகுப்பறைகள் தூய்மையாக உள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். 

கழிப்பறைகள் தூய்மை, குடிநீர் வசதிகள் உறுதி செய்ய வேண்டும். 

பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு பாடப்புத்தகம், சீருடை, நோட்டுப் புத்தகங்கள் போன்றவை வழங்க வேண்டும். பஸ் பயண அட்டை தேவைப்படும் மாணவ மாணவியருக்க காலதாமதமின்றி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் வசதியில் குறைபாடு இருந்தால் அவற்றை சரி செய்ய வேண்டும். பள்ளிக் குழந்தைகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குறிப்பாக மின் கசிவு, திறந்த கிணறுகள், பழந்தடைந்த கட்டிடங்கள், போன்றவை இருந்தால் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Post Top Ad