பள்ளிகளுக்கு ஸ்‌மா‌ர்ட் போன், பைக் கொண்டுவர மாணவர்களுக்கு தடை - Asiriyar.Net

Thursday, May 30, 2019

பள்ளிகளுக்கு ஸ்‌மா‌ர்ட் போன், பைக் கொண்டுவர மாணவர்களுக்கு தடை
மாணவர்கள்‌ பள்ளிக்கு ஸ்‌மா‌ர்ட் போன், ‌இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டுவர கூடாது என ‌பள்ளிகல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக ‌உயர்நிலை, மேல்நிலை‌ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்‌பிள்ளது. அதில் காலை 9.15 மணிக்குள் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும்‌ என குறிப்பிடப்பட்டுள்ளது‌. மேலும் இருச்சக்க‌ர வாகனம், செல்போன் உள்ளிட்ட பொருட்‌களை கொண்டுவர கூடாது என்றும், மீறினால் அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு திரும்பி வழங்‌கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு என சீ‌ருடையில் ‌குறிப்பிடப்பட்டுள்ள ஆடை வரம்பை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கைகளில் வளையம், கயிறு, செயின் அணியக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த நாள் என்றாலும் சீருடையில் மட்டுமே வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Post Top Ad